பாஜக டார்கெட் வைத்த 17 மாநிலங்கள்.! அமித் ஷா வெளியிட்ட அதிரடி அறிவிப்பு.!! - Seithipunal
Seithipunal


வரும் நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு நாடு முழுவதும் உள்ள அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன. பாஜக, காங்கிரஸ், மூன்றாவது அணி என்று பரபரப்பாக இந்திய அரசியல் களமே செயல்பட்டு கொண்டிருக்கிறது.

சமீபத்தில் நடந்து முடிந்த 5 மாநில தேர்தலில் பாஜக ஒரு மாநிலத்தில் கூட வெற்றி பெறவில்லை. இதனையடுத்து கட்சியில் பல அதிரடி மாற்றங்களை அறிவித்து வருகிறது பாஜக தலைமை. 

இந்நிலையில், நாடாளுமன்ற தேர்தலை சந்திக்க பாஜக 17 மாநிலங்களுக்கான புதிய பொறுப்பாளர்களை நியமித்துள்ளது. கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷா 17 மாநிலங்களுக்கான புதிய பொறுப்பாளர்களும், இணை பொறுப்பாளர்களும் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

அதன்படி, 

* உத்தர பிரதேசம் - கோவர்தன் ஜதாபியா, கட்சியின் துணை தலைவர் துஷ்யந்த் கவுதம், 

* மத்திய பிரதேசம் - நரோத்தம் மிஸ்ரா 

* ராஜஸ்தான் - மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் 

* உத்தரகாண்ட் - மத்திய அமைச்சர் தவார்சந்த் கெலாட்

* பீகார் - பாஜ பொதுச்செயலாளர் புபேந்தர் யாதவ் 

* சட்டீஸ்கர் - அனில் ஜெயின், 

* ஆந்திர மாநிலத்ம் - மாநிலங்களவை உறுப்பினர் முரளிதரன் மற்றும் கட்சியின் பொதுச்செயலாளர் தியோதர் ராவ் 

* அசாம் - மகேந்திர சிங், 

* குஜராத் - ஓ.பி. மாத்தூர் அவர்களும் பொறுப்பாளர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மேலும், இமாச்சல பிரதேசம், ஜார்கண்ட், மத்திய பிரதேசம், மணிப்பூர், நாகலாந்து, பஞ்சாப், தெலங்கானா மற்றும் சிக்கிம் உள்ளிட்ட மாநிலங்களுக்கும் பொறுப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.  


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

amith sha new announcement


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->