அதிமுக கூட்டணியில், மேலும் ஒரு கட்சி! இறுதி செய்த ஓபிஎஸ், இபிஎஸ்! முதன்முறையாக பாமகவுடன் ஓரணியில்!  - Seithipunal
Seithipunal


அதிமுக தலைமையிலான கூட்டணியில் மேலும் ஒரு கட்சி இணைந்து கையெழுத்தாகி உள்ளது. வருகின்ற மக்களவைத் தேர்தலுக்கு தமிழ்நாடு பாண்டிச்சேரி அடங்கிய 40 தொகுதிகளுக்கும் கூட்டணி அமைப்பதில் அனைத்து கட்சிகளும் தீவிரமாக இருந்த நிலையில், முதலாவதாக அதிமுக பாமக  கூட்டணியை உறுதி செய்த அதிமுக, கூட்டணியில் பாமக விற்கு 7 மக்களவை தொகுதிகள் ஒரு ராஜ்யசபா என முடிவு செய்து இறுதியனது. 

அதன் பிறகு தேசிய கட்சியான பாஜகவுடன் நடைபெற்ற கூட்டணி உடன்படிக்கையில், பாஜகவிற்கு 5 தொகுதிகளை ஒதுக்கி இறுதி செய்து அதிமுகவும் பாஜகவும் கூட்டணி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். இந்நிலையில் புதுச்சேரி மாநிலத்திற்கு என்று உள்ள ஒரே ஒரு தொகுதியில் அதிமுக கூட்டணியில் அந்த மாநிலத்தில் எதிர் கட்சியாக உள்ள, என் ஆர் காங்கிரஸ் போட்டியிடும் என ஒப்பந்தம் தயார் செய்யப்பட்டு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் ஒருங்கிணைப்பாளர் இபிஎஸ் என் ஆர் காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி ஆகியோரின் தலைமையில் ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. 

முதன்முறையாக பாட்டாளி மக்கள் கட்சியுடன் இணைந்து ஓரணியில் என் ஆர் காங்கிரஸ் போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது. கடந்த முறை என் ஏர் காங்கிரசுக்கான ராஜ்யசபா சீட்டை ஜெயலலிதா இருந்த போது அதிமுகவிற்கு ஒதுக்கியது நினைவைருக்கலாம். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

admk with nr congress in pondichery


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->