திமுக முன்னாள் எம்பியும், நடிகருமான ரித்திஷ் திடீர் மரணம்!  - Seithipunal
Seithipunal


தமிழ் நடிகரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான நடிகர் ஜெ கே ரித்தீஷ் சற்றுமுன் மாரடைப்பால் மரணமடைந்தார் என்று செய்தி வெளியாகியுள்ளது.  அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தில் உறுப்பினராக இருந்து வந்த ரித்தீஷ்,  இதற்கு முன்னதாக திமுக தலைவர் மு க ஸ்டாலின் அன்னான் அழகிரியின் தீவிர ஆதரவாளராக இருந்தார்.  அதன் மூலம் 2009ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு நாடாளுமன்ற உறுப்பினராக வெற்றி பெற்றார். 

பின்னர் 2011ம் ஆண்டு நிலா அபகரிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட பின்னர் அவர் 2014 இல் அதிமுகவில் இணைந்தார். திமுகவில் முக அழகிரி ஓரங்கட்டப்பட்ட  நிலையில் அவருடைய அனுமதியின்படி, திமுகவில் இருந்து விலகிய அவர் அதிமுகவில் இணைந்தார். அவர் 2008 ஆம் ஆண்டு நாயகன் என்ற படத்தில் நடித்து வெளியான பொழுது அனைவரும் யார் இந்த ரித்தீஷ் என்று கேட்க வைக்கும் அளவில் அவர் விளம்பரங்களும் அதிரடி சண்டைக்காட்சிகளும் இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது. 

இறுதியாக இந்த வருடம் வெளியான எல்கேஜி படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அவருக்கு 46 வயது மட்டுமே ஆகிறது. கடந்த 2007 ஆம் ஆண்டு ஜோதீஸ்வரி என்பவரை திருமணம் செய்த அவருக்கு 11 வயதில் ஆதிக் ரோஷன் என்ற மகன் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இலங்கையை பூர்வீகமாக கொண்ட இவர் இலங்கையில் பிறந்து அடுத்த மூன்று வருடங்களில் இந்தியாவில் ராமேஸ்வரத்தில் குடியேறினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

actor jk rithish passes away


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->