இந்த பிரச்சனை உள்ளவங்க பூண்டு சாப்பிடாதீங்க.! உஷார் தகவல்.! - Seithipunal
Seithipunal


சைவம் மற்றும் அசைவ உணவுகளில்  முக்கியமாக பயன்படுத்தப்படுவது பூண்டு. இது உடல் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கக் கூடியதாகவும்,செரிமானத்திற்கு உதவக் கூடியதாகவும், இருக்கிறது. மேலும் இதில்  பொட்டாசியம், இரும்புச்சத்து, கால்சியம், வைட்டமின் போன்ற பல்வேறு வகையான சத்துக்களும் நிறைந்து இருக்கின்றன. பூண்டில் பல வகையான நன்மைகள் இருந்தாலும்  அவற்றின் நறுமணம் மற்றும் அவற்றில் இருக்கக்கூடிய சில தீமைகள் காரணமாக அடிக்கடி சாப்பிடுவதை தவிர்த்துக் கொள்வது நல்லது. அதற்கான காரணங்கள் என்ன என்று பார்ப்போம்.

பூண்டு உடம்பிற்கு சூடு தரக்கூடியது என்பதால் குளிர்காலங்களில் சிலர் அடிக்கடி பூண்டு சாப்பிட்டு வருவதை பார்த்திருப்போம். இதன் காரணமாக‌ சுவாசத்தில் துர்நாற்றம் வீசி மற்றவர்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தலாம்.

குறைந்த ரத்த அழுத்தம் உடையவர்கள் பூண்டு சாப்பிட்டு வந்தால் அவர்களது உடல் பலவீனமாகி சோர்வடையும் எனவே குறைந்த இரத்த அழுத்தம் உடையவர்கள் பூண்டு சாப்பிடுவதை தவிர்த்துக் கொள்வது நல்லது.

கல்லீரல் பாதிப்பு இருப்பவர்களும் பூண்டை தவிர்த்துக் கொள்வது நலம். பூண்டில் இருக்கக்கூடிய அமிலத்தன்மையின் காரணமாக கல்லீரல் பாதிப்புக்காக எடுத்துக் கொள்ளப்படும் மருந்துகளின் தாக்கம் குறைய வாய்ப்பிருக்கிறது.

பூண்டுகளில் இருக்கக்கூடிய அமிலத்தன்மையின் காரணமாக அவற்றை அடிக்கடி சாப்பிடுவதால் நெஞ்செரிச்சல் போன்ற தொந்தரவுகள் ஏற்பட வாய்ப்புகள் உண்டு.

வயிற்றுப்போக்கு காலங்களில் பூண்டு சாப்பிட்டு வந்தால் அது குடலின் இயக்கத்தை அதிகப்படுத்தி வயிற்றுப்போக்கை மேலும் மோசமாக்கும். இதனால் வயிற்றுப்போக்கு காலகட்டங்களில் பூண்டை தவிர்த்துக் கொள்வது நலம்.

உடலில் ஏதேனும் அறுவை சிகிச்சை செய்து கொள்ள தயாராகுபவர்கள் இரண்டு வாரங்களுக்கு முன்பாகவே பூண்டு சாப்பிடுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Reasons why garlic should not be eaten often


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->