சூப்பரான சுரைக்காய் வடை ரெசிபி.! சுவையாக செய்வது இப்படி தான்.! - Seithipunal
Seithipunal


நீர்ச்சத்து, இரும்புச்சத்து அதிகமாக உள்ள சுரைக்காயை வைத்து நாம் எப்படி ருசியான உடலுக்கு ஆரோக்கியமான சுரைக்காய் வடை செய்யலாம் என்று பார்க்கலாம். 

தேவையான பொருட்கள்:
சுரைக்காய் - 1
பெரிய வெங்காயம் -1
பச்சை மிளகாய் - 4
கொத்தமல்லி இலைகள் - 1 கப்
கருவேப்பிலை - 1 கப்
சோம்பு - 1 தேக்கரண்டி
மிளகாய்த்தூள் - 1 தேக்கரண்டி
அரிசி மாவு - 1 கப்
உப்பு - தேவைக்கேற்ப 

செய்முறை:
ஒரு சுரைக்காய் தோல் சீவி எடுத்துக் கொள்ளவும். பின்பு சுரைக்காயை மெலிதாக சீவி ஒரு பாத்திரத்தில் போட்டு கொள்ளவும்.

பின்பு பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லி இலைகள், கருவேப்பிலை, சோம்பு, மிளகாய் தூள் அரிசி மாவு, உப்பு சேர்த்து பிசைந்து கொள்ளவும்.

பிறகு அந்த கலவையை வடை போல் தட்டி எடுத்து மிதமான தீயில் எண்ணெயில் பொரித்து எடுத்தால் சுரைக்காய் வடை சூப்பராக ரெடி.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Bottle guard vadai receipe


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->