சுவையான 'பப்பாளி காய் கூட்டு' ஒருமுறை இப்படி ட்ரை பண்ணி பாருங்க.! - Seithipunal
Seithipunal


புதிய சுவையில் பப்பாளிக்காய் கூட்டு எப்படி செய்வது என்பதை இந்த பதிவில் பார்க்கலாம். 

தேவையான பொருட்கள்: 
பப்பாளிக்காய் 
பாசிப்பருப்பு 
பச்சை மிளகாய் 
தக்காளி 
மஞ்சள் தூள் 
தேங்காய் துருவல் 
சீரகம், கடுகு 
உளுத்தம் பருப்பு 
வெங்காயம் 
பெருங்காயத்தூள் 
கொத்தமல்லி இலைகள் 
உப்பு 
எண்ணெய் 

செய்முறை: 
முதலில் ஒரு மிக்ஸி ஜாரில் துருவிய தேங்காய், சீரகம், பச்சை மிளகாய் சேர்த்து நன்றாக அரைத்து வைத்துக் கொள்ளவும். ஒரு குக்கரின் நறுக்கி வைத்துள்ள பப்பாளிக்காய், பாசிப்பருப்பு, மிளகாய், தக்காளி தேவையான அளவு உப்பு, தண்ணீர் விட்டு நன்றாக வேக வைத்துக் கொள்ளவும். 

வேக வைத்துள்ள பப்பாளிக்காயில் அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுதினை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும். 5 நிமிடம் நன்றாக கொதிக்க விடவும். 

பிறகு ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம் பருப்பு, கருவேப்பிலை, பெருங்காயத்தூள் சேர்த்து நன்றாக தாளித்து பப்பாளி காயுடன் சேர்த்து விடவும். இறுதியாக கொத்தமல்லி இலைகளை தூவி இறக்கினால் சுவையான பப்பாளி காய் கூட்டு தயார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

papaya kootu recipe in tamil


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->