உடல் வெப்பத்தை தணிக்கும் 'சுரைக்காய் தயிர் கிரேவி' ஒரு முறை இப்படி ட்ரை பண்ணி பாருங்க.!
bottle gourd curd gravy recipe in tamil
உடல் சூட்டை தணிக்கும் சுரைக்காய் தயிர் கிரேவி எப்படி செய்வது என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
சுரைக்காய்
சின்ன வெங்காயம்
மிளகாய்
சீரகம்
இஞ்சி
தேங்காய்
கருவேப்பிலை
உப்பு
எண்ணெய்
கடுகு
தயிர்
செய்முறை:
முதலில் சுரக்காயை சுத்தம் செய்து விதைகளை நீக்கி சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். ஒரு மிக்ஸி ஜாரில் தயிர், தேங்காய், மிளகாய், சீரகம், இஞ்சி, சின்ன வெங்காயம், தேங்காய் துருவல் செய்து நன்றாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
ஒரு கடாயை அடுப்பில் வைத்து சிறிதளவு தண்ணீர், உப்பு சேர்த்து நறுக்கி வைத்துள்ள சுரைக்காய் துண்டுகளை போட்டு வேக வைத்துக் கொள்ளவும்.
மற்றொரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி கடுகு, கருவேப்பிலை, மிளகாய் சேர்த்து தாளிக்கவும். பிறகு வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் நன்றாக வதங்கியதும் அரைத்து வைத்துள்ள விழுதை சேர்த்து தேவையான அளவு உப்பு, தண்ணீர் விட்டு கொதிக்க விடவும். பிறகு வேக வைத்துள்ள சுரக்காய் சேர்த்து நன்றாக கொதிக்க விடவும். அவ்வளவுதான் சுவையான சுரைக்காய் தயிர் கிரேவி தயார்.
English Summary
bottle gourd curd gravy recipe in tamil