நடுவானில் விமான பணிப்பெண்ணை கட்டிப்பிடித்த வாலிபர் - அதிரடி உத்தரவிட்ட நீதிமன்றம்.! - Seithipunal
Seithipunal


நடுவானில் விமான பணிப்பெண்ணை கட்டிப்பிடித்த வாலிபர் - அதிரடி உத்தரவிட்ட நீதிமன்றம்.!

மஸ்கட்டில் இருந்து வங்கதேச தலைநகரான டாக்காவுக்கு மும்பை வழியாக கடந்த சில நாட்களுக்கு முன்பு விமானம் ஒன்று புறப்பட்டுச் சென்றது. இந்த விமானத்தில் வங்கதேசத்தை சேர்ந்த முகமது துலால் என்ற வாலிபர் பயணம் செய்தார்.

இந்த நிலையில், இந்த விமானம் மும்பையில் தரையிறங்குவதற்கு முன்பு இருக்கையில் இருந்து எழுந்த முகமது துலால் பணிப்பெண்ணை கட்டிப்பிடித்து  முத்தமிட முயன்றுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த பணிப்பெண் கத்தி கூச்சலிட்டார். 

இதைப்பார்த்த மற்ற பயணிகள் அவரை தட்டிக்கேட்டதனால் முகமது துலால் அவர்களை திட்டியுள்ளார். இதையடுத்து விமானம் மும்பையில் தரையிறங்கியதும் பணிப்பெண்ணை கட்டிப்பிடித்து முத்தமிட முயன்ற முகமது துலாலை விமான நிலைய அதிகாரிகள் போலீசில் ஒப்படைத்தனர். 

பின்னர் போலீசார் விமான பணிப்பெண் கொடுத்த புகாரின் பேரில், முகமது துலால் மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். இதைத்தொடர்ந்து அவரை அந்தேரி மாஜிஸ்திரேட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இந்தச் சம்பவத்தால் விமான நிலையத்தில் பெரும்பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

youth arrested for tried hug and kiss to flight woman employee


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->