ட்விட்டர் மூலம் பாஸ்போர்ட் பெற்று மகிழ்ச்சியடைந்த பெண்மணி! - Seithipunal
Seithipunal



கர்நாடகா மாநிலம் ஷிமோகாவை சேர்ந்தவர் அக்ஷதா, ஜேர்மனியில் வாழ்ந்து வருகிறார். பிரசவத்திற்காக இந்தியா வந்த அக்ஷதாவிற்கு, சமீபத்தில் குழந்தை பிறந்தது. எனவே குழந்தையோடு ஜேர்மனிக்கு திரும்ப வேண்டும் என்பதால் குழந்தைக்கு பாஸ்போர்ட் கேட்டு விண்ணப்பித்திருந்தார். ஆனால் பாஸ்போர்ட் வழங்க தாமதம் ஏற்பட்டுள்ளது.

அதற்கு மேலும் காலதாமதம் செய்ய விரும்பாத அக்ஷதா  ட்விட்டர் மூலம் வெளியுறவுத்துறை அமைச்சருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். ட்விட்டரில்  சுறுசுறுப்பாக இயங்கி வரும் இந்திய வெளியுறவு துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜை நாடியிருக்கிறார்.

சுஷ்மா ஸ்வராஜிற்கு அக்ஷதா கோரிக்கை விடுத்த இரண்டே நாட்களில் அவரின் குழந்தைக்கு பாஸ்போர்ட் வழங்கப்பட்டது. இதனால் மகிழ்ச்சியடைந்த அக்ஷதா சுஷ்மா ஸ்வராஜிற்கு நன்றி தெரிவித்ததோடு இச்செய்தியை அனைவருக்கும் பகிர்ந்தும் வருகிறார்.



 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Woman with a passport by Twitter


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->