திருப்பதி ஏழுமலையான் கோவில் கும்பாபிஷேகம் தேதி அறிவிப்பு! - Seithipunal
Seithipunal


12 ஆண்டுக்கு ஒருமுறை நடக்கும் கோவில்களுக்கு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டு வருகிறது. அதேபோல், கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு  திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

இதனையடுத்து ஆகஸ்டு மாதம் 16 ஆம் தேதி கும்பாபிஷேகம் நடக்க உள்ளதாக கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. மேலும் ஆகஸ்டு 11 ஆம் தேதி 150-க்கும் மேற்பட்ட வேதபண்டிதர்கள் கோவிலில் உள்ள திருமண மண்டபத்தில் வேதமந்திரங்கள் முழங்க பூஜைகள் நடத்துகின்றனர்.

இதனால், ஆகஸ்டு 12 ஆம் தேதி முதல் 16 ஆம் தேதி வரை மூலவரை தரிசனம் செய்ய பக்தர்கள் அனுமதிக்கப்படமாட்டார்கள் என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. 16 ஆம் தேதி காலை 10.16 மணியளவில், மூலவர் சன்னதி உள்பட அனைத்து சன்னதிகளிலும் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடக்கிறது.

கும்பாபிஷேகம் முடிந்த நாள் முதல் 48 நாட்கள் மண்டல பூஜைகள் நடக்க உள்ளதாகவும், தேவஸ்தான துணை அதிகாரி கே.எஸ்.சீனிவாசராஜூ தகவல் அளித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

trupathi temple festival date


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->