விபத்து எதிரொலி! ரயில் ஓட்டுநர்களுக்கான பணி நேர கட்டுப்பாடு! - Seithipunal
Seithipunal


ரயில் ஓட்டுநர்கள் 12 மணி நேரத்திற்கு மேல் பணியாற்றக் கூடாது என ரயில்வே வாரியம் அறிவித்துள்ளது.

அனைத்து ரயில்வே மண்டலங்களுக்கும் ரயில் ஓட்டுநர்கள் கார்டுகள் உள்ளிட்ட பணியாளர்களின் பணி நேரம் தொடர்பாக புதிய வழிகாட்டுதல்களை ரயில்வே வாரியம் அனுப்பியுள்ளது.

பணியாளர்களின் வேலை நேரம் மற்றும் அவர்களின் ஓய்வு நேரம் ஆகியவற்றை ரயில்களின் இயக்கம் பாதுகாப்பாக இருப்பதை மேம்படுத்த கவனித்துக் கொள்ளுமாறு மண்டலங்களுக்கு ஏற்கனவே பல்வேறு வழிகாட்டுதல்களின் தொகுப்பாக அனுப்பட்டுள்ளது. 

தற்போது அனுப்பிய புதிய வழிகாட்டுதல்கள், 'ரயில்வே ஓட்டுநர்களின் பணி நேரம் 9 மணி நேரத்தை தாண்டக்கூடாது. அதிகபட்சமாக 12 மணி நேரத்திற்கு மேல் பணியாற்றக் கூடாது. 

வெள்ளம், நிலநடுக்கம், விபத்து போன்ற அவசர சூழ்நிலைகளில் கூடுதல் நேர பணியாற்ற நேரிடலாம் என்று ஓட்டுனர்களுக்கு ரயில் கட்டுப்பாட்டாளர் தெரிவிக்க வேண்டும்' என குறிப்பிடப்பட்டுள்ளது. 

இந்திய ரயில்வே ஓட்டுநர்கள் கூட்டமைப்பு புதிய வழிகாட்டுதல்களுக்கு அதிருப்தி தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அந்த கூட்டமைப்பு செயல் தலைவர் தெரிவித்திருப்பதாவது, ''அவசர சூழல்கள் என்ற போர்வையில் ரயில் ஓட்டுநர்களிடம் 15 மணி நேரம் அல்லது அதற்கு அதிகமாக பணியாற்றுமாறு கேட்கப்படுகிறது. 

ரயில் ஓட்டுனரை பணியில் இருந்து விடுவிப்பது எப்படி. அவர்களை பணியில் இருந்து விடுவிக்கும் அதிகாரம் எவருக்கும் இல்லை. 

ஓட்டுநர்கள் பணி நேரம் முடிந்த பிறகும் கூடுதல் நேரம் பணியாற்றியதால் தான் கடந்த காலங்களில் பல விபத்துகள் நேர்ந்தன. 

ஓட்டுநர்கள் ரயிலை இயக்கிக் கொண்டே உணவு சாப்பிட்டு தவறு இழைத்ததாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குற்றம் சாட்டும் சம்பவங்கள் நேர்ந்துள்ளன. 

இந்நிலையில் 12 மணி நேரம் வேலை நேரத்தில் ஓட்டுனருக்கான உணவு இடைவேளை தொடர்பாக எதுவும் குறிப்பிடப்படவில்லை'' என தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

train drivers Working hours No more than Railway Board


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->