டீசல் விலை உயர்வால் ஏற்பட்ட இழப்பை சரிசெய்ய சத்தமே இல்லாமல் அரசு மேற்கொண்ட நடவடிக்கை .,வெளியான அதிர்ச்சி தகவல்..! - Seithipunal
Seithipunal


டீசல் விலை உயர்வால் தமிழகம் முழுவதும் 2000 அரசு பேருந்துகளின் சேவை நிறுத்தி வைக்கபட்டு இருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் டீசல் மானியம் ரத்து, போக்குவரத்து ஊழியர்களின் சம்பள உயர்வு போன்றவற்றால் நாள் ஒன்றுக்கு ரூ.8 கோடி இழப்பை அரசு போக்குவரத்து கழகம் சந்தித்து வருகிறது.

diesel க்கான பட முடிவு

இந்நிலையில் நாளுக்கு நாள் அதிகரிக்கும்  டீசல் விலை உயர்வு காரணமாக கூடுதலாக ரூ.1 கோடி சேர்ந்து நாள் ஒன்றுக்கு 9 கோடி ரூபாய் இழப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

மேலும் இதனால் ஏற்படும் இழப்பை ஈடுகட்ட அமைதியான முறையில் போக்குவரத்து கழகங்கள் அதிரடி நடவடிக்கையில் இறங்கியுள்ளன.

அதன்படி தமிழகம் முழுவதும் 2000 வழித்தடங்களில் அரசுப் போக்குவரத்து சேவையானது நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. government bus strike in taminadu க்கான பட முடிவு

மேலும் தமிழகம் முழுவதும் போக்குவரத்து கழகங்கள் நாள் ஒன்றுக்கு 20 லட்சம் லிட்டர் டீசல் பயன்படுத்தி வந்த நிலையில், அதனை 17 லட்சம் லிட்டராக குறைக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும்,

மேலும் 4000 வழித்தடங்களில் அரசுப் பேருந்துகளின் எண்ணிக்கை படிப்படியாக குறைக்கப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

The government has taken steps to repair the loss caused by diesel prices


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->