பாதுகாப்பு படையினருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே நடந்த துப்பாக்கி சூடு.! 2 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.! - Seithipunal
Seithipunal


காஷ்மீரின் தெற்கில் அமைந்திருக்கும் ஹந்த்வாராவில் சத்கண்ட் பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் வந்தது.

இதையடுத்து, பாதுகாப்பு படையினர் அந்த பகுதிக்கு சென்று அங்கு தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு மறைந்திருந்த தீவிரவாதிகள் அவர்களை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தினர்.

அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, பாதுகாப்பு படை நடத்திய என்கவுண்டரில் 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். விசாரணையில், அவர்கள் ஹிஸ்புல் முஜாகிதின் அமைப்பை சேர்ந்தவர்கள் என்பதும், அதில் ஒருவர் அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்தில் பி ஹெச் டி பட்டம் முடித்ததும் தெரிய வந்தது. தீவிரவாதிகள் நடமாட்டத்தை தொடர்ந்து அந்த பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு இருக்கிறது.

English Summary

terrorist attacked army soldiersSeithipunal