கல்லூரி மாணவிகளுக்கு மின்சார ஸ்கூட்டர் - இளைஞர்களின் பெற்றோருக்கு ஓய்வூதியம் - தெலுங்கனாவில் வாக்குறுதிகளை வாரி இறைக்கும் காங்கிரஸ்.!! - Seithipunal
Seithipunal


கல்லூரி மாணவிகளுக்கு மின்சார ஸ்கூட்டர் - இளைஞர்களின் பெற்றோருக்கு ஓய்வூதியம் - தெலுங்கனாவில் வாக்குறுதிகளை வாரி இறைக்கும் காங்கிரஸ்.!!

கர்நாடகா மாநில சட்டசபைக்கு நாளை தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் அரசியல் கட்சியினர் அனைவரும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வாக்குறுதிகளை அளித்து வந்தனர். பாஜக சார்பில், தினமும் அரை லிட்டர் பால்பாக்கெட் மற்றும் ஆண்டுக்கு 3 சிலிண்டர் இலவசம் என்று அறிவிக்கப்பட்டது. 

அதேபோல் காங்கிரஸ், பெண்களுக்கு இலவச பேருந்து பயணம், இலவச அரிசி, இலவச மின்சாரம், மற்றும் பஜ்ரங் தள அமைப்புக்கு தடை உள்ளிட்ட அறிவிப்புகளை வெளியிட்டன. அரசியல் கட்சிகளின் இந்த அறிவிப்புகள் தேர்தல் களத்தை மேலும் சூடுபிடிக்கச் செய்தன. 

இந்நிலையில், தெலுங்கானா மாநிலத்தில் தேர்தல் அறிவிப்பு வெளியாகும் முன்பே கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி முன்னிலையில் 'ஐதராபாத் இளைஞர் பிரகடனம்' என்ற பெயரில் இளைஞர்களுக்கான தேர்தல் திட்ட அறிக்கையை காங்கிரஸ் வெளியிட்டு உள்ளது. 

அந்த அறிக்கையில், 18 வயது பூர்த்தி அடைந்த மாணவிகளுக்கு மின்சார ஸ்கூட்டர் இலவசமாக வழங்கப்படும். அதேபோல், இளைஞர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை, அவர்களது பெற்றோருக்கு மாதம் ரூ.25 ஆயிரம் ஓய்வூதியம், இளைஞர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த ரூ.10 லட்சம் வரை வட்டியில்லா கடன் உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகளும் அதில் இடம் பெற்றுள்ளன. 

தெலுங்கானா மாநிலத்திற்கு இந்த ஆண்டின் இறுதியில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது ஆகும். சட்டசபைத் தேர்தல் நடைபெறுவதற்கு முன்னதாகவே காங்கிரஸ் தேர்தல் வாக்குறுதி அளித்தது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

telungana congrass announce promises for assembly election


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->