ராகுல் காந்தியை கோவிலுக்குள் அனுமதிக்க முடியாது... கொந்தளிக்கும் காங்கிரஸ்! அசாமில் பரபரப்பு! - Seithipunal
Seithipunal


காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி நீதி யாத்திரையை அசாம் மாநிலத்தில் தொடர்ந்து கொண்டிருக்கிறார். இவருக்கு எதிராக நேற்று பா.ஜ.கவினர் கட்சி கொடிகளையும், கம்புகளையும் ஏந்தி நின்ற போது அவர்களுக்கு ராகுல் தனது அன்பை வெளிப்படுத்தி இருந்தார்

இந்நிலையில் இன்று, அசாம் மாநிலத்தில் உள்ள படாதிரவாதன் கோவிலுக்கு சென்ற ராகுல் காந்தியை போலீசார் தடுத்து நிறுத்தினர். 

இதனால் ஆத்திரமடைந்த காங்கிரஸ் கட்சியினர் ராகுல் காந்தியை கோவிலுக்குள் அனுமதிக்காததால் போலீசார் உடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். 

இதனைத் தொடர்ந்து, கோவிலுக்குள் செல்ல விடாமல் தடுப்பது ஏன் என காவல்துறையினரிடம் ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

அதற்கு போலீசார், பிற்பகல் 3 மணிக்கு பின்னரே கோவிலுக்குள் அனுமதிக்கப்படும் எனவும் அயோத்தி ராமர் கோவில் குடமுழுக்கு முடிந்த பின்னர் கோவிலுக்குள் செல்ல அனுமதிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Rahul Gandhi not allowed temple in Assam


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->