#BREAKING சற்றுமுன் ஆந்திராவை தாக்கியது பெய்ட்டி புயல்.! சூறாவளி காற்றுடன் ஆகோரோஷமாக கரையை கடந்தது.!! - Seithipunal
Seithipunal


வங்க கடலில் உருவாகியுள்ள பெய்ட்டி புயல் நேற்று இரவு முதல் அதி தீவிர புயலாக மாறி உள்ளது. ஆந்திராவை நோக்கி நகர்ந்து வரும் பெய்ட்டி புயலின் வேகம் அதிகரித்துள்ளதால், சூறைகாற்றுடன் இன்னும் ஓருயிரு மணி நேரத்தில் கரையை கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில் சற்றுமுன் சற்றுமுன் ஆந்திராவை தாக்கிய பெய்ட்டி புயல், சூறாவளி காற்றுடன் ஆகோரோஷமாக கரையை கடந்தது.

கடந்த 4 நாட்களாக அச்சுறுத்தி வந்த பெய்ட்டி புயலானது தற்போது மேற்கு மத்திய மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்க கடல் பகுதியில் நகர்ந்து, மணிக்கு 19 கி.மீ., வேகத்தில் ஆந்திர மாநிலம் காக்கிநாடா பகுதிக்கும் ஏனாம் பகுதிக்கும் இடையே கரையை கடந்துள்ளது.

புயல் கரையை கடக்கும் போது மணிக்கு 80 கி.மீ வேகத்தில் சூறை காற்று வீசியதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது அந்த பகுதியில் பலத்த காற்றுடன் கன மழை பெய்துவருகிறது. காக்கிநாடா பகுதியில் பல மின்கம்பங்களும், மரங்களும் சாய்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

pethey cyclone now attack to andra


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->