மதுரை | ஆன்லைனில் மாணவர்களுக்கு போதை மாத்திரைகள் சப்ளை! பொறிவைத்து பிடித்த போலீசார்! - Seithipunal
Seithipunal


மதுரையில் தூக்க மாத்திரைகளை போதைமாத்திரைகளாக விற்பனை செய்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்:

மதுரை: பெரியார் பேருந்து நிலையம் அருகில் உள்ள அரசு பாலிடெக்னிக் பாலம் கீழ்ப்பகுதியில் அவ்வப்போது சட்ட விரோதமான செயல்கள் நடந்து வருவதாக போலீசாருக்கு தொடர்ந்து புகார்கள் வந்தன.

அதே போல் சிலர் மாணவர்களுக்கும், இளைஞர்களுக்கும் போதை மாத்திரைகளை விற்பனை செய்வதாக ஜெய்ஹிந்த்புரம் காவலருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. 

அதனை தொடர்ந்து போலீசார் அந்த பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட போது, மதுரை சோலையழகுபுரம் பகுதியை சேர்ந்த குமரேசன் (வயது 26), ஜெய்ஹிந்த்புரம் பகுதியை சேர்ந்த வீரமனோகர் (வயது 37) இருவரும் போதை மாத்திரைகளை விற்பனை செய்வதை கண்டறிந்து அவர்களை போலீசார் கைது செய்தனர்.

அவர்களிடம் 1,890 போதை மாத்திரைகளை பறிமுதல் செய்து, அவர்களிடம் நடத்திய முதற்கட்ட விசாரணையில், தூக்கமின்மைக்கு தரப்படும் மாத்திரைகளை போதைக்காக பயன்படுத்தி வந்துள்ளனர். 

மேலும் மருத்துவர்களின் பரிந்துரை மற்றும் மருந்து சீட்டு இல்லாமல் மருந்து கடைகளில் இவ்வகை மாத்திரை வழங்கப்படுவதில்லை என்பதால் இணையதளத்தில் 'இந்தியா மார்ட்' எனும் ஆன்லைன் வர்த்தகம் மூலம் தொடர்பு கொண்டு மாத்திரைகளை ஆர்டர் செய்து ஆன்லைனில் பெற்றுள்ளனர். 

அதனை தொடர்ந்து வாங்கிய மாத்திரைகளை 10 மாத்திரைகள் கொண்ட ஒரு அட்டையாக விற்று வந்துள்ளதும் தெரிய வந்தது. பின்னர் இருவரிடம் இருந்து போதை மாத்திரைகளை வாங்கி விற்பனை செய்து வருபவர்கள் குறித்தும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

online through students supplying drug pills


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->