திருமணம் செய்வதாக உடலுறவு வைத்துக் கொண்டால் குற்றமாகாது - ஒடிசா நீதிமன்றம் சர்ச்சை தீர்ப்பு.! - Seithipunal
Seithipunal


பெண்ணின் சம்மதத்துடன் உடலுறவு கொண்டால் பாலியல் வன்கொடுமையாகாது என ஒடிசா நீதிமன்றம் சர்ச்சை தீர்ப்பளித்துள்ளது.

ஒடிசா உயர்நீதிமன்றத்தில் திருமணம் செய்து கொள்வதாக உறுதியளித்துவிட்டு தன்னை பாலியல் வன்கொடுமை செய்துவிட்டதாக புவனேஸ்வரை சேர்ந்த பெண் ஒருவர் புகார் மனு தாக்கல் செய்திருந்தார்.

இதனை விசாரித்த ஒடிசா உயர்நீதிமன்ற நீதிபதி பாலியல் வன்கொடுமை வழக்கை தள்ளுபடி செய்தார். மேலும், இந்த வழக்கு குறித்த தீர்ப்பில் திருமணம் செய்து கொள்வதாக நம்பிக்கை அளித்து இருவரின் சம்மதத்துடன் நடந்த உடலுறவுக்கு பிறகு சில காரணங்களால் திருமணம் நடக்கவில்லை என்றால் இது பாலியல் வன்கொடுமையாகாது.       

நல்ல நம்பிக்கையில் கொடுக்கப்பட்ட வாக்குறுதியை பின்னர் நிறைவேற்ற முடியாமல் போனதற்கும் திருமணம் செய்து கொள்வதாக பொய்யான வாக்குறுதி அளிப்பதற்கும் வித்தியாசம் இருக்கிறது என தெரிவித்துள்ளார்.


காதல் தொடக்கத்தில் நட்பால் ஆரம்பித்த உறவு உண்மையாக இருந்திருந்தால் அது எப்போதும் அவநம்பிக்கையின் அடையாளமாக முத்திரை குத்தப்படக்கூடாது. ஆண் நண்பர் மீது பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டையும் தெரிவிக்கக் கூடாது. எனவே இந்த வழக்கில் பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டில் இருந்துதான் குற்றம் சாட்டப்பட்டவர் விடுவிக்கப்படுகிறார். மற்ற மோசடி வழக்குகள் குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தப்படும் என நீதிபதி தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Odisha Court Controversial Verdict for relationship and marriage


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->