அடுத்த அதிரடி.! மொத்தமாய் மாறப்போகும் இந்திய ரூபாய் நோட்டு.! அட்டகாசமாய் அச்சடிக்கும் பணி தொடக்கம்.!! - Seithipunal
Seithipunal


கறுப்புப்பணத்தை ஒழிக்கும் விதமாக கடந்த நவம்பர் 8, 2016ம் ஆண்டு இரவு 8 மணி அளவில் மக்கள் மத்தியில் உரையாடிய நரேந்திர மோடி தீவிரவாதிகள் மத்தியில் பணநடமாட்டத்தை குறைக்கவும், பதுக்கப்பட்டிருக்கும் கறுப்புப்பணத்தை வெளிக்கொண்டு வரும் விதமாக, உயர் மதிப்புடைய ரூ. 500 மற்றும் ரூ. 1000 நோட்டுகள் மதிப்பிழப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அறிவித்தார். 

முன் ஏற்பாடுகள் இன்றி திடீரென அறிவிக்கப்பட்ட இந்த பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் பணப்புழக்கமின்றி மக்கள் திண்டாடினர். தங்கள் வங்கிக்கணக்கில் இருந்த பணத்தை கூட எடுக்க முடியாமல் வரிசையில் காத்திருக்கும் நிலைக்கு தள்ளப்பட்டனர்.

இதனை சமாளிக்க புதிய வண்ணங்கள் மற்றும் புதிய பாதுகாப்பு அம்சத்துடன் ரூ.500, ரூ.2000 நோட்டுகள் வெளியிடப்பட்டன. இதிலும் தட்டுப்பாடுகள் ஏற்பட்டு இந்திய மக்கள் கடும் துயரத்தில் ஆழ்த்தப்பட்டனர். ஒரு வழியாக தற்போது நிலைமை சீராகியுள்ளது.

மேலும், ரிசர்வ் வங்கியானது பழைய இந்திய ரூபாய் நோட்டுகளை மற்ற முடிவு செய்து, ரூ.10, ரூ.50 புதிய அம்சங்களுடனும் புதிய வண்ணத்திலும் அறிமுகமாயின. அதனையடுத்து ரூ.200 நோட்டுகள் அறிமுகபடுத்தப்பட்டன. 

இந்நிலையில், தற்போது இருக்கும் 100 ரூபாய் நோட்டுக்கு பதில் புதிய வண்ணத்திலும், முன்பை விட சிறிய அளவிலும் குறைத்து அச்சடிக்கும் பணிகள் தொடங்கப்பட்டதாகவும் வரும் செப்டெம்பர் மாத இறுதிக்குள் இந்த புதிய 100 ரூபாய் நோட்டுக்கள் புழக்கத்திற்கு வரவிருப்பதாகவும் செய்திகள் வந்துள்ளன.

Image result for ஏ.டி.எம் செய்திபுனல்

வரப்போகும் இந்த புதிய 100 ரூபாய் நோட்டுகள், ஊதா நிறத்தில் (பிங்க்) அச்சடிக்கும் பணி மத்திய பிரதேசமநிலத்தில் உள்ள டேவாஸ் ரூபாய் நோட்டு அச்சகத்தில் நடைபெற்றுவருவதாக செய்திகள் கிடைத்துள்ளன.

''இந்திய நோட்டின் வர்ணங்கள் மாறினாலும். வறுமையின் நிறம் அப்படியே உள்ளதை கண்ணெதிரே பார்க்க கூடிய உண்மை நிலவரம்''


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

NEW DESIGN CURRENCY IN INDIAN MONEY


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->