உலகிலேயே சிறிய ஸ்பூன்.. கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்த இந்திய இளைஞர்.! - Seithipunal
Seithipunal


உலகத்தில் உள்ள சிலர் வழக்கத்திற்கு மாறான சில செயல்களை செய்து தனக்கென தனி அடையாளத்தை ஏற்படுத்திக் கொள்கின்றனர். அந்த வகையில் சிலர் உலக சாதனைகளை படைக்கின்றனர். அதன்படி, இடைவிடாத சாகசம், சமையல் நடனம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் தொடர்ந்து பலமணி நேரங்கள் செய்து கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற்று வருகின்றனர்.

பீகார் மாநிலத்தைச் சேர்ந்த சஷிகான் பிரஜபதி (வயது 25) என்ற இளைஞர் கைவினைப் பொருட்கள் செய்வதில் கைதேர்ந்தவராக இருந்துள்ளார். இந்த நிலையில் இவர் 1.6 மில்லி மீட்டர் அளவில் உலகிலேயே சிறிய மர ஸ்பூன் செய்து உலக சாதனை படைத்துள்ளார்.

இந்த உலக சாதனையை செய்ய பலமுறை முயற்சி எடுத்த சஷிகாந்த் 10 முறை தோல்வி அடைந்தார். ஆனால் தனது விடாமுயற்சியால் மீண்டும் மீண்டும் முயற்சித்த இளைஞர் சாதித்து காட்டியுள்ளார்.

இதற்கு முன்பு 2 மில்லி மீட்டர் அளவில் மர ஸ்பூன் செய்யப்பட்டு கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற்று இருந்த நிலையில், தற்போது அந்த சாதனையை இந்திய இளைஞர் சஷிகாந்த் முறியடித்துள்ளார். சஷிகாந்த் இந்த ஸ்பூனை தனித்தனி பாகங்களாக செய்யாமல் ஒரே மரத்துண்டில் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Indian young man Guinness world record for small spoon


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->