இந்தியாவில் ஆளுக்கு 5 இலட்சம் ரூபாய்! மொத்தமாய் 440 இலட்சம் கோடி ரூபாய்!! பீதியை கிளப்பும் பரபரப்பு அறிக்கை!! - Seithipunal
Seithipunal


''கிரெடிட் சூயிஸ்'' வெளியிட்டுள்ள அறிக்கையில், ''இந்தியாவிலுள்ள கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை 3.43 லட்சம் பெறவும், நம் ஒவ்வருவருக்கும் ரூபாய் 5 லட்சம் மதிப்புள்ள சொத்துக்கள்'' இருப்பதாக ஒரு சராசரி விகித புள்ளி விபரத்தை வெளியிட்டுள்ளது.

'கிரெடிட் சூயிஸ்' என்ற அமைப்பு ஒவ்வொரு ஆண்டும் சர்வதேச சொத்து அறிக்கையை வெளியிடுகிறது. அதன்படி இந்த ஆண்டு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது, 

*  கடந்த 12 மாத காலத்தில் இந்தியாவில் உள்ள கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை 3.43 லட்சமாக உயர்ந்துள்ளது. 

* இந்த 12 மாதங்களில், கோடீஸ்வரர்கள் பட்டியலில் புதிதாக 7300 இணைந்துள்ளார்கள். 

* இந்தியாவில் உள்ள மோதி கோடீஸ்வரர்களின் சொத்து மதிப்பு ஆறு ட்ரில்லியன் டாலர் (ரூ.440 லட்சம் கோடி) என தெரிவிக்கப்பட்டுள்ளது.

* இந்தியாவில் தனிநபர் ஒருவரின் சராசரி சொத்து மதிப்பு ரூ. 5 லட்சமாக உள்ளது.

* மற்ற நாடுகளைக் காட்டிலும் 18.6 சதவீத வளர்ச்சியுடன் இந்திய பெண் பணக்காரர்கள் முன்னிலையில் உள்ளனர்.

* கடந்த 12 மாதங்களில் புதிதாக சேர்ந்துள்ள 7300 இந்தியப் பணக்காரர்களில் 1500 பேர் ரூ.700 கோடிக்கு மேலான சொத்துகளையும், 3400 பேர் ரூ.350 கோடிக்கு மேலான சொத்துகளையும் வைத்துள்ளனர்.

* இந்திய பணக்காரர்களின் மொத்த சொத்துகளில் 91% அசையா சொத்துகளாக உள்ளது. 

* கடந்த ஒரு வருடத்தில் அசையா சொத்துக்கள் 4.3 சதவீத வளர்ச்சி கண்டுள்ளது.

* இப்படியே போனால் இந்தியாவில் உள்ள கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை 2023-ஆம் ஆண்டு 5.26 லட்சமாகவும், மொத்த சொத்து மதிப்பு ரூ. 645 லட்சம் கோடியாகவும் உயரும். என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

indian rich man list


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->