தீராத தலைவலி., மனநலம் பாதித்த குழந்தைகள்., எனக்கு பின்னர் கவனிக்க யார்?.! நெஞ்சை உருக்கிய கடிதத்தை கையில் வைத்து கதறிய கணவன்.!!  - Seithipunal
Seithipunal


மகாராஷ்டிரா மாநிலத்தில் இருக்கும் மும்பை பரோல் பகுதியில் இருக்கும் குடியிருப்பில் வசித்து வருபவன் பெயர் சந்தீப். இவர் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவியின் பெயர் ரேவதி (37). இவர்கள் இருவருக்கும் சுபம் என்கிற 16 வயதுடைய மகனும்., ரீசா என்கிற 4 வயதுடைய மகளும் இருக்கின்றனர். 

நேற்று வழக்கம் போல பணிக்கு சென்ற சந்தீப் தனது மனைவிக்கு அலைபேசியில் தொடர்பு கொண்டுள்ளார்., அந்த நேரத்தில் அவர் அலைபேசியை எடுக்கவில்லை. பல நேரம் தொடர்ந்து அலைபேசிக்கு தொடர்பு கொண்டும் அவர் அலைபேசியை எடுக்காததால்., சந்தேகமடைந்து அண்டை வீடு நபருக்கு தொடர்பு கொண்டு விஷயத்தை தெரிவித்து., வீட்டில் சென்று பார்க்குமாறு தெரிவித்துள்ளார். 

அதன் படி அண்டை வீட்டுகாரர் இல்லத்திற்கு சென்று சோதித்த போது., உள்தாழ்ப்பால் இடப்பட்டு நீண்ட நேரம் கதவை தட்டியும் கதவை திறக்காமல் இருந்துள்ளார். இந்த தகவலை சந்தீப்பிற்கு தெரிவிக்கவே., உடனடியாக இல்லத்திற்கு விரைந்து கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது சந்தீப்பின் மனைவி மற்றும் குழந்தைகள் உயிரற்ற நிலையில் இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். 

இந்த சம்பவம் குறித்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கவே., சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் மூவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இல்லத்தில் சந்தீப்பின் குழந்தைகள் கட்டிலின் மீது மயங்கிய நிலையிலும்., ரேவதி தூக்கில் பிணமாகவும் இருந்துள்ளனர். இதனை கண்டு கதறியழுத சந்தீப் செய்வதறியாது திகைத்து போனார். 

இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்ட போது., ரேவதி தற்கொலை செய்வதற்கு முன்னதாக கடிதம் ஒன்றை எழுதி வைத்துள்ளார். அந்த கடிதத்தை ரேவதியின் சகோதரர்., கணவர் மற்றும் காவல் துறையினர் என்றும் பிரித்து தனித்தனியாக எழுதி வைத்திருந்தார். அந்த கடிதத்தில்., தீராத தலைவலியால் அவதியடைந்த நான் தற்கொலை செய்ய முடிவு செய்து., எனது இறப்பிற்கு அடுத்தபடியாக மனதளவில் பாதித்த எனது குழந்தைகளை கவனிக்க ஆள் இருக்காது என்று அவர்களையும் கொலை செய்து தற்கொலை செய்து கொள்கிறேன் என்று எழுதியிருந்தார். 

இந்த சம்பவமானது அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. மேலும்., குழந்தைகளுக்கு மனநலம் சரியில்லாமல் இருந்து., தனக்கும் உள்ள பிரச்சனையால் தற்கொலை முடிவு எடுத்துக்கொண்ட விஷயத்தை அறிந்து சந்தீப் கதறியழுதது., அங்குள்ளவர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in Maharashtra mother killed her children and attempt suicide


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->