ஏலம் போகும் விநாயகர் லட்டு கொள்ளை! கேமராவில் பதிவாகியிருந்த காட்சியால் பொதுமக்கள் அதிர்ச்சி!  - Seithipunal
Seithipunal


நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பல இடங்களில் விநாயகர் சிலை வைத்து வழிபாடு நடத்துனர். அது போல் தெலுங்கானா, ஹைதராபாத் மியாபூரில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டையின் போது லட்டு படைக்கப்பட்டு பின்னர் அதனை ஏலம் விடப்படுவது வழக்கம். 

அவ்வாறு ஏலம் விடப்படும் லட்டை பல்லாயிரம் ரூபாய்க்கு போட்டி போட்டுக் கொண்டு ஏலம் எடுப்பார்கள். இந்த ஆண்டும் மியாபூரில் பிரம்மாண்டமான விநாயகர் சிலை வைக்கப்பட்டு விநாயகர் கையில் 11 கிலோ லட்டு வைத்து வழிபாடு நடத்தினர். 

இந்த லட்டுவை விசர்ஜனம் நேரத்தில் 7 நாட்களுக்குப் பிறகு ஏலம் விட முடிவு செய்திருந்தனர். இந்நிலையில் நேற்று காலை விநாயகர் சிலை அருகே பக்தர்கள் சென்று வழிபட்ட போது விநாயகர் சிலை கையில் இருந்த லட்டு காணாமல் போயிருந்தது. 

இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் சிலையின் அருகே பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்த காட்சிகளை பார்த்தனர். 

அதில், விநாயகர் சிலை அருகே வாலிபர் ஒருவர் வந்து ஏலத்திற்கு விடுவதற்காக வைக்கப்பட்டிருந்த லட்டை திருடி சென்ற காட்ச்சிகள் பதிவாகியிருந்தது. இந்த காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Hyderabad Ganesh pandal laddu Robbery 


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->