பரிமாறப்பட்ட பிரியாணியில் காத்திருந்த அதிர்ச்சி: ரூ.20 ஆயிரம் அபராதம் விதித்து எச்சரிக்கை! - Seithipunal
Seithipunal


தெலுங்கானா, ஹைதராபாத் ஜூப்ளிகில்ஸ் பகுதியில் உள்ள ஒரு பிரபல ஹோட்டலில் வாடிக்கையாளர் ஒருவருக்கு பிரியாணி பரிமாறப்பட்டுள்ளது. 

அப்போது அந்த பிரியாணியில் கரப்பான் பூச்சி இறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்த வாடிக்கையாளர் உடனடியாக ஓட்டல் ஊழியர்களிடம் தெரிவித்துள்ளார். 

இதனைத் தொடர்ந்து ஹோட்டல் ஊழியருக்கும் வாடிக்கையாளருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. பின்னர் இது குறித்து ஹைதராபாத் மாநகராட்சி மற்றும் உணவு கட்டுப்பாட்டு அதிகாரிகளிடம் புகார் தெரிவிக்கப்பட்டது. 

தகவல் அறிந்த உணவு கட்டுப்பாட்டு அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஹோட்டலில் ஆய்வு மேற்கொண்டனர். 

அப்போது பிரியாணியில் கரப்பான் பூச்சி இறந்து கிடந்தது தெரியவந்துள்ளது. உடனடியாக சுகாதாரமற்ற முறையில் உணவு தயாரிப்பதாக தெரிவித்து ஹோட்டலுக்கு ரூ. 20,000 அபராதம் விதிக்கப்பட்டு ஹோட்டல் உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்தனர். 

ஹோட்டலில் பரிமாறப்பட்ட பிரியாணியில் கரப்பான் பூச்சி உயிரிழந்த சம்பவம் அந்த பகுதிகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Hyderabad cockroach found biryani fined Rs20000


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->