இந்தியாவின் தற்போதைய பரிதாப நிலை.! வெளியான அதிர்ச்சி ரிப்போர்ட்.!! வாழ்க்கையை துலைத்து சகலவிதமான போதையிலும் மிதக்கும் பரிதாபம்.!! - Seithipunal
Seithipunal


மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைப்பின் சார்பிலும்., எய்ம்ஸ் மருத்துவக்கல்லூரியின் சார்பிலும்., இவர்கள் அனைவரும் இணைந்து இந்தியாவில் பயன்படுத்தப்படும் போதைப் பொருட்கள் மற்றும் அதனால் ஏற்படும் நோய் பாதிப்புகள் என்ற தலைப்பில் ஒரு ஆய்வை நடத்தினர்.

இந்த ஆய்வில் இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் 256 மாவட்டங்களிலும் சுமார் 4.73 லட்சம் நபர்களிடம் ஆய்வு நடத்தப்பட்டது. இந்த ஆய்வின் முடிவில் வெளியான தகவல்களை கண்டு அதிகாரிகள் அதிர்ந்து போனார்கள். 

இந்தியாவைப் பொறுத்த வரையில் சுமார் 10 வயது முதல் 75 வயது வரை இருக்கும் 16 கோடி நபர்கள் சராசரியாக 14.6% அளவிற்கான நபர்கள் மது அருந்துகின்றனர். சிறுவயதிலிருந்து மது அருந்தும் காரணத்தால் சத்தீஸ்கர்., திரிபுரா., பஞ்சாப் மற்றும் உத்திரப்பிரதேசம் போன்ற மாநிலங்களில் மதுவினால் ஏற்படும் நோய் பாதிப்புகள் அதிகமாக உள்ளது. 

அவ்வாறு மது அருந்துபவர்களில் சுமார் 38 நபர்களில் ஒருவர் மட்டுமே அதிலிருந்து விடுபடுவதற்கு சிகிச்சை எடுத்துக் கொள்கிறார் என்பதும் அவர்களில் ஒருவர் மட்டுமே மருத்துவமனையில் நோயாளியாக உள்ளார் என்ற தகவலானது வெளியாகி பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. 

மதுபோதைக்கு அடிமையான பலர் அதற்கு மேலுள்ள கஞ்சா மற்றும் ஹெராயின் போன்ற பொருட்களை உபயோகப்படுத்தி தொடங்கிவிட்டனர். அந்த வகையில் சுமார் 2.8 சதவீதம் பேர் கஞ்சா போதையையும்., 1.14 சதவீதம் பேர் ஹெராயினும்., 0.94% நபர்கள் போதை மருந்துப் பொருட்களையும்., 0.50% உள்ள நபர்கள் ஓபியம் பயன்படுத்தி வருகின்றனர். 

மேலும்., 10 வயது முதல் 75 வயது வரை உள்ள நபர்கள் சுமார் 1.18 கோடி நபர்கள் தூக்க மாத்திரை மற்றும் மயக்க மருந்து போன்றவற்றை போதைக்காக பயன்படுத்தி வருகின்றனர்


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

how many peoples drinks in India


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->