போதைப் பொருள் வழக்கு.. NCB விசாரணைக்கு அமீர் ஆஜர்.!! - Seithipunal
Seithipunal


டெல்லியில் 2000 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் திமுக அயலக அணியைச் சேர்ந்த ஜாபர் சாதிக்கின் நண்பரும் இயக்குனருமான அமீர் இன்று டெல்லியில் உள்ள போதைப்பொருள் தடுப்பு பிரிவு அலுவலகத்தில் விசாரணைக்காக ஆஜராக வேண்டும் என சம்மன் அனுப்பப்பட்டிருந்தது.

இந்த சம்மனை பெற்றுக் கொண்ட இயக்குனர் அமீர் நேரில் ஆஜராக கால அவகாசம் வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தார். இந்த நிலையில் டெல்லியில் உள்ள போதை பொருள் தடுப்பு பிரிவு அலுவலகத்தில் அவருடைய வழக்கறிஞர் பிரபாகரனுடன் இயக்குனர் அமீர் ஆஜராகி உள்ளார். 

போதைப் பொருள் கடத்தல் மன்னன் ஜாபர் சாதிக்கு உடன் இயக்குனர் அமீருக்கு உள்ள தொடர்பு குறித்து மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் விசாரணை மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இயக்குனர் அமீரும் சாபர் சாதிக்கும் தொழில் முறையில் நெருக்கமாக இருப்பதால் மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் விசாரணை மேற்கொள்ள உள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Director Ameer appears in NCB regards nicotine case


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->