நான் ஜோதிடர் அல்ல... பிரியங்கா காந்தி திடீர் ஆவேசம்! நடந்தது என்ன? - Seithipunal
Seithipunal


உத்திர பிரதேசம், சகாரன்பூரில் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பிரியங்கா காந்தி கலந்து கொண்ட பேசினார். 

அப்போது அவர், பொதுமக்கள் அட்டூழியங்களுக்கும் அநீதிகளுக்கும் எதிராக நிற்கின்றனர். இதற்கு இந்த மாபெரும் கூட்டம்தான் சான்று. 

தேர்தல் பத்திரம் ஒரு வெளிப்படையான திட்டம் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். பிறகு ஏன் நன்கொடையாளர்களின் பெயர்கள் ரகசியமாக வைக்கப்படுகிறது. 

விவசாயிகள், பெண்கள், இளைஞர்களின் பிரச்சினைகளை பிரதம நரேந்திர மோடி கண்டு கொள்ளவில்லை. மின்னணு ஓட்டு பதிவு இயந்திரத்தில் ஊழல் செய்யாமல் தேர்தலை நடத்தினால் பா.ஜ.கவுக்கு 180 தொகுதிகளில் மட்டுமே வெற்றி என்பது கிடைக்கும் என தெரிவித்திருந்தார். 

இந்நிலையில் இந்திய கூட்டணி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும் என பிரியங்கா காந்தியிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். 

அதற்கு பிரியங்கா காந்தி, நான் ஒன்றும் ஜோதிடர் அல்ல. இந்தியா கூட்டணி அதிக தொகுதிகளில் வெற்றி பெறும். மக்கள் மாற்றத்தை விரும்புகின்றனர் என தெரிவித்துள்ளார்.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

congress leader Priyanka Gandhi speech


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->