3 செயலிகளை உருவாக்கிய 8ம் வகுப்பு சிறுவன்.. கின்னஸ் உலக சாதனை.! - Seithipunal
Seithipunal


ஹரியானா ஜஜ்ஜரின் ஜவஹர் நவோதயா வித்யாலயாவில் 8ஆம் வகுப்பு படிக்கும் கார்த்திகேய ஜவஹர் என்ற மாணவர் எந்த வழிகாட்டுதலும் இல்லாமல் 3 கற்றல் செயலிகளை உருவாக்கி உலக கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார் .

12 வயது சிறுவனுக்கு விவசாயியான அவரது தந்தை அஜித் சிங், கொரோனா பொதுமுடக்கத்தின் போது ஆன்லைன் வகுப்புகளுக்காக சுமார் ரூ. 10 ஆயிரம் செலவில் ஆன்ராய்டு மொபைல் ஃபோன் ஒன்றை வாங்கிக் கொடுத்துள்ளார்.

யூடியூப் உதவியுடன் ஃபோனை வைத்து படிப்பை தொடர்ந்த அவர், பின்பு மூன்று செயலிகளை உருவாக்கினார். முதல் செயலி லூசண்ட் ஜி.கே. ஆன்லைனில் பொது அறிவு தொடர்பானது. இரண்டாவது செயலி ராம் கார்த்திக் கற்றல் மையம். இது கோடிங் மற்றும் கிராஃபிக் டிசைனிங் தொடர்பானது.

மூன்றாவது செயலி ஸ்ரீ ராம் கார்த்திக் டிஜிட்டல் கல்வி. தற்போது, ​​​இந்த செயலிகள் மூலம் 45,000க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு இலவச பயிற்சியை வழங்குகின்றன.

இவர் இளம் வயதிலேயே பல மதிப்புமிக்க விருதுகளை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், கார்த்திக், ஹார்வர்ட் பல்கலைக்கழக நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற்ற பிறகு உதவித்தொகை பெற்று, பல்கலைக்கழகத்தில் பி.எஸ்.சி கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

8th student discover 3 Android apps


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->