அந்த 15 லட்சம் கிடைக்கும்! ஆனா? மோடி அலுவலகம் புதிய தகவல்! - Seithipunal
Seithipunal


கடந்த 2014ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலின் போது, பிஜேபியின் பிரதமர் வேட்பாளராக நரேந்திர மோடி ஏகப்பட்ட வாக்குறுதிகளை தேர்தல் பிரச்சாரத்தின் போது அள்ளி வீசினார். 

அதில் முக்கியமாக, ''வெளிநாடுகளில் பதுக்கப்பட்டிருக்கும் கறுப்புப்பணத்தை மீட்டுக் கொண்டுவருவேன். அந்த கருப்பு பணத்தை இந்தியர்களின் வங்கிக்கணக்கில் செலுத்தினால், ஒவ்வொருவருக்கும் ரூ.15 லட்சம் கிடைக்கும் என்று சொன்ன வாக்குறுதியை நம்பி வடமாநிலங்கள் தங்களின் வாக்குகளை மோடிக்கு வாரி வழங்கி அவரை பிரதமராக அரியணை ஏற்றினர்.

பிரதமர் ஆனா நாள் முதல், இன்று வரை கருப்பு பணமும் வரவில்லை, 15 லட்சமும் பார்க்கவில்லை, இதில் வெறுத்து போன 'தகவல் அறியும் உரிமைச் சட்ட ஆர்வலர் மோகன்குமார் சர்மா' கடந்த 2016, நவம்பர் 26ஆம் தேதி ஆர்.டி.ஐ. மனு ஒன்றை அளித்திருந்தார். அதில் ''அந்த ரூ.15 லட்சத்தை ஒவ்வொருவரின் வங்கிக்கணக்கிலும் டெபாசிட் செய்வேன் என மோடி கூறினாரே, அதற்கான தேதி பற்றிய தகவல் வேண்டும்''. என அதில் தெரிவித்தார். 

இந்நிலையில், இதுதொடர்பாக தற்போது பிரதமர் மோடி அலுவலகம் பதிலைத்துள்ளது. அதில், ‘ஒவ்வொருவர் கணக்கிலும் ரூ.15 லட்சம் செலுத்துவதற்கான தேதி, தகவல் அறியும் உரிமைச் சட்ட விதிகளின் படி ‘தகவல்’ என்ற வரையறைக்குள் வராது. எனவே, இதுகுறித்து பதிலளிக்க இயலாது என தெரிவித்துள்ளது. 

மேலும், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் படி, தகவல் என்பது பதிவுகள், ஆவணங்கள், குறிப்புகள், மின்னஞ்சல்கள், கருத்துகள், அறிவுரைகள், பத்திரிகை வெளியீடுகள், சுற்றறிக்கைகள், உத்தரவுகள், ஒப்பந்தங்கள், அறிக்கைகள், மாதிரிகள், தரவு பொருட்கள் உள்ளிட்டவைதான் எனவும் விளக்கமளிக்கப் பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

15 lakhs But New information on Modi office


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->