கோடை காலத்தில் ஏற்படும் பிரச்சனைகளை உடைத்தெறிய இந்த முறையை மட்டும் மேற்கொண்டு., கோடையை கொண்டாடுங்கள்.!!  - Seithipunal
Seithipunal


நமது நண்பர்கள் அல்லது வீட்டார்களின் உடலில் ஏற்படும் மாற்றத்தை நாம் அறிவோம். அவர்களின் உடலானது பெரும்பாலும் சூடாகவே இருக்கும்., இது குறித்து அவர்களிடம் கேட்டால் தெரியவில்லை என்பார்கள். இதனையே உடற்காங்கை என்றும் கூறுவார்கள். 

நமது உடலுக்கு இயற்கையான வெப்பத்தை வழங்குவது உணவு பொருட்கள். நமது உடல் தொடர்ந்து இயங்கிக்கொண்டே இருக்கும் சமயத்தில்., உடல் சூடானது சீரான நிலையில் இருந்து கொண்டே இருக்கும். உடலின் இயற்கையான வெப்பம் என்பது வேறு., உடற்காங்கை என்பது வேறு. உடற்காங்கையானது உடலில் ஏற்படும் பல்வேறு நோய்களுக்கு காரணமாக அமைகிறது. 

மதியம் உண்வருந்தும் போது உணவுடன் மோர் கலந்து ., சின்ன வெங்காயத்துடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் உடலின் சூடானது குறைக்கப்படும்.  

தினமும் இரண்டு அல்லது மூன்று நெல்லிக்காய்களை கண்டிப்பாக உண்ண வேண்டும்.. கிடைக்கும் சமயத்தில் தினமும் அல்லது இரண்டு நாட்களுக்கு ஒரு முறை வெள்ளரி., கேரட் சாறுகளை அருந்துவதன் மூலமாக உடல் சூடானது குறைக்கப்படும். 

முடிந்தளவு இளநீரை அதிகளவு பருகுவதன் மூலமாக உடல் சூடானது தனிக்கப்படும்., இளநீரை காலையில் குடிப்பது நல்லது. 

பெண்களுக்கு உடலின் சூடானது வெகுவாக அதிகரித்தால்., உடல் மெலிந்து பல நோய்கள் ஏற்படும். இந்த பிரச்சனைக்கு பெண்கள் சந்தனத்தை அம்மியில் பன்னீர் கலந்து அரைத்து., ஒரு டம்ளர் பாலில் சிறிதளவு கலந்து சாப்பிட்டு வர வெள்ளை வெட்டை நோய்யானது குணமாகும். 

வீட்டில் பெற்றோர்களின் சொல்படி வெள்ளிக்கிழமையன்று நல்லெண்ணையை தேய்த்து குளித்து வர உடல் சூடு., வெட்டை போன்ற பிரச்சனைகள் ஏற்ப்பட்டது., முடிந்தளவு எளிதில் செரிக்க கூடிய உணவு பொருட்களையே சாப்பிட்டு வந்தால் நல்லது.  


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

to avoid summer problems to use this hints and activities


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->