வீட்டிலேயே உடலுக்கு நன்மையை வழங்கும் நிலக்கடலை பால் தயாரிப்பது எப்படி.!! - Seithipunal
Seithipunal


இளம் வயதினர் முதல் அனைத்து வயதுடையவர்களும் உண்ணும் பொருட்களில் நிலக்கடலையும் ஒன்று. இந்த நிலக்கடையில் இருக்கும் புரதம்., பாஸ்பிரஸ்., நையாசின் போன்ற சத்துக்கள் அதிகளவில் உள்ளது. 

இதுமட்டுமல்லாது நிலக்கடலையில் இருக்கும் மாங்கனீசு சத்துக்களின் மூலமாகவும்., கால்சியம் சத்துக்களின் மூலமாகவும் உடலுக்கு அதிகளவு நன்மை கிடைக்கிறது. நிலக்கடலையில் பாலை சேர்த்து குடிக்கும் பட்சத்தில்., நமது உடலுக்கு ஆரோக்கியம் அதிகளவு கிடைக்கிறது. அந்த வகையில் உடலுக்கு நன்மையை வழங்கும் நிலக்கடலை பாலை தயாரிப்பது எப்படி என்று காண்போம். 

நிலக்கடலை பால் செய்ய தேவையான பொருட்கள்: 

நிலக்கடலை - 1 குவளை., 
முந்திரி - 5 எண்ணம் (Nos).,
ஏலக்காய் - சிறிதளவு...

நிலக்கடலை பாலினால் நமது உடலுக்கு கிடைக்கும் அறிய நன்மைகள்.! உடலுக்கும் உள்ளத்திற்கும் தோற்றத்திற்கும் என்று தன்னுள் பல மகத்துவங்கள்.!! 

நிலக்கடலை பால் செய்முறை: 

முதலில் எடுத்துக்கொண்ட நிலக்கடலையை ஒரு நாள் முழுவதும் ஊற வைத்து எடுத்து கொள்ள வேண்டும். அதே போன்று முந்திரியையும் ஊற வைக்க வேண்டும். 

பின்னர் எடுத்துக்கொண்ட நிலக்கடலை மற்றும் முந்திரியை முளைவிடும் தானியம் போன்று துணியில் கட்டி முளைக்க விட வேண்டும். 

முந்திரி மற்றும் நிலக்கடலை முள்ளிவிட்டவுடன் அரவை இயந்திரத்தில் போட்டு அதனுடன் ஏலக்காயை சேர்த்து நீர் ஊற்றி அரைத்து கொள்ள வேண்டும். 

பின்னர் பாலை நன்றாக கொதிக்க வைத்து விட்டு அதனுடன் அரைத்து வைத்த கலவையை சேர்த்து காய்ச்சி பருகி வரவேண்டும்.  


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

how to make nilakadalia paal or Groundnut milk


கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...



Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...




Seithipunal
--> -->