ரஜினியின் அண்ணன்  போயஸ் கார்டன் பக்கமே வராததற்கு இதுதான் காரணமா.?! வில்லங்கமான கதையா இருக்கே.?!  - Seithipunal
Seithipunal


தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். கடந்த 40 வருடங்களுக்கும் மேலாக தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு சாம்ராஜ்யத்தை உருவாக்கி வைத்திருப்பவர். இவர் தன்னை பேட்டி எடுக்க வந்ல லதா என்ற கல்லூரி மாணவியை காதலித்து கரம் பிடித்தார். இந்த தம்பதியினருக்கு ஐஸ்வர்யா ரஜினிகாந்த் மற்றும் சௌந்தர்யா ரஜினிகாந்த் என்று இரண்டு மகள்கள் உள்ளனர். 

சிறுவயதிலேயே தனது தாய் தந்தையை இழந்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை அவரது அண்ணன் சத்ய நாராயண ராவ் தான் தனது மகன் போல வளர்த்து ஆளாக்கினார். அதனால் தான் தனக்கு எப்பொழுது எல்லாம் வெற்றிகள் வருகிறதோ அப்போதெல்லாம் தனது அண்ணனுக்கு பெருமை சேர்க்க சூப்பர் ஸ்டார் தவறுவதில்லை.

சமீபத்தில் கூட அண்ணனின் 80வது பிறந்த நாள் விழாவிற்கு பெங்களூர் சென்று வந்த சூப்பர் ஸ்டார் தனது அண்ணனுக்கு தங்கக் காசுகளால் அபிஷேகம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தனது அண்ணன் மற்றும் அண்ணியின் மேல் அளவு கடந்த பாசமும் மரியாதையும் வைத்திருப்பவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.

ரஜினி தான் தனது அண்ணன் மற்றும் அண்ணியை பெங்களூர் சென்று பார்த்து வருவார். அவர்கள் சென்னைக்கு வந்து ரஜினியை பார்ப்பது என்பது அரிதிலும் அரிதான ஒரு விஷயம். இதற்குக் காரணம் ரஜினியின் மனைவி லதா ரஜினிகாந்த் தான் என கோடம்பாக்கத்தில் இருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.  ரஜினிகாந்த்க்கு திருமணமான ஆரம்ப காலகட்டத்திலேயே அவரது அண்ணன் மற்றும் அண்ணியை மரியாதை குறைவாக நடத்தியிருக்கிறார் லதா ரஜினிகாந்த்.

தனது குடும்ப உறவினர்களுக்கு ரஜினியின் செல்வாக்கை பயன்படுத்தி  பல்வேறு உதவிகளை செய்து வரும் லதா தனது கணவரான ரஜினியின் குடும்பத்தாரை எப்போதுமே மரியாதையோடு நடத்தியதில்லை என்று சொல்லப்படுகிறது. இதன் காரணமாகவே, அவர்கள் சென்னை வருவதை தவிர்த்து வருவதாகவும்  செய்திகள் தெரிவிக்கின்றன. ரஜினிகாந்த் எப்போதெல்லாம் தனக்கு கஷ்டமாக இருப்பதாக உணர்கிறாரோ அப்பொழுதெல்லாம் பெங்களூர் சென்று தனது அண்ணனை பார்த்து அவரது அறிவுரைகளை கேட்டு வருவார் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

this is the reason why rajinikanth elder brother sathya naranaya didnt visit boyas garden


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->