பிரபல நடிகரின் திரைப்பட இசை வெளியீட்டு விழா தேதி அறிவிப்பு.! பிரம்மாண்டமாக மதுரையில் நடக்க உள்ளது.!! - Seithipunal
Seithipunal


தமிழில், இயக்குனர் பொன்ராம் இயக்கத்தில் மூன்றாவது முறையாக இணைந்துள்ள சிவகார்த்திகேயன் மற்றும் சமந்தா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் சீமராஜா. தயாரிப்பாளர் ஆர்.டி.ராஜா, தயாரித்துள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா மதுரையில் பிரம்மாண்டமாக நடைபெற உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

மேலும், இந்த படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து பின்னணி வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. பிரபல இசையமைப்பாளர் டி.இமான் இசையமைதுள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா, மதுரையில் வருகிற ஆகஸ்ட் மாதம் 3-ஆம் தேதி பிரம்மாண்டமாக நடக்க இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது.

இதையடுத்து, இந்தப் படத்தின், தயாரிப்பாளர் ஆர்.டி.ராஜா அளித்த பெட்டியில், தமிழ் திரையுலகின் இதய துடிப்பாக விளங்கும் நகரம் மதுரை . படத்தை ஆரம்பிப்பதற்கு முன்பே படத்தின் இசை வெளியீட்டு விழாவை மதுரையில் தான் நடத்த வேண்டும் என்று முடிவு செய்தோம். 

அது மட்டுமில்லாமல், மதுரையில் உள்ள ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் பெரும் எண்ணிக்கையில் இந்த விழாவில் கலந்து கொண்டு, இந்த நிகழ்ச்சியை ஒரு பெரிய வெற்றியாக மாற்றுவார்கள் என்று நம்புகிறேன் என்றும் அவர் கூறினார். இதற்கு முன்னதாக `வாரேன் வாரேன் சீமராஜா' என்ற சிங்கிள் வரும் 25 ஆம் தேதி வெளியிட உள்ளதாக அறிவித்தது குறிப்பிடத் தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

seemaraja audiyo launch date announcement


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->