சாய் பல்லவியின் அடுத்த சாதனை.! மொத்த தென்னிந்திய சினிமாவும் கதிகலங்க போகிறது.!! - Seithipunal
Seithipunal


யூ-டியூப் சமூகவலைத்தளத்தில் தென்னிந்திய திரைப்பட பாடல்களில் அதிகம் அதிகம் பார்க்கப்பட்ட பாடல் என்ற சாதனையை தனுஷ்-சாய் பல்லவி நடித்து வெளியான மாரி 2 படத்தின், "ரவுடி பேபி" என்ற பாடல் 200 மில்லியன் பார்வைகளை தொட உள்ளது.

தனுஷ் நடிப்பில் வெளியான 3 என்ற திரைப்படத்தில் ''ஒய் திஸ் கொலவெறி'' என்ற பாடல் கடந்த ஏழு வருடங்களாக யூ-டியூப் சமூகவலைத்தளத்தில் தென்னிந்திய திரைப்பட பாடல்களில் அதிகம் அதிகம் பார்க்கப்பட்ட பாடல் என்ற சாதனையை தக்கவைத்திருந்தது.

பின்னர் கடந்த 2017ஆம் ஆண்டு சாய் பல்லவி நடிப்பில் வெளியான ஃபிதா படத்தில் உள்ள வச்சிந்தே என்ற பாடல் தென்னிந்திய திரைப்படப் பாடல்களில் அதிக பார்வையை கொண்ட பாடல் என்ற இடத்தை பிடித்தது.

இந்நிலையில், கடந்த ஜனவரி மாதம் தனுஷ் நடிப்பில் வெளியான மாரி படத்தின் இரண்டாம் பாகத்தில் ரவுடி பேபி என்ற பாடல் ஆரம்பத்திலிருந்தே வெற்றி நடை போடத் துவங்கியது. இந்த மாரி 2 படத்தின்  ரவுடி பேபி பாடலில் சாய்பல்லவின் ஆட்டம் அனைத்து  ரசிகர்களையும் கட்டிப் போட்டது என்றுதான் சொல்ல வேண்டும்.

இந்தப் பாடலுக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார். வச்சிந்தே என்ற பாடல் 38 நாளில் 175 மில்லியன் பார்வையாளர்களை கடந்திருந்தது. தற்போது அதனை ரவுடி பேபி பாடல் 194,456,932  பார்வையாளர்களை கடந்து தொடர்ந்து தென்னிந்திய திரைப்பட பாடல்கள் அதிகம் பார்க்கப்பட்ட பாடல் என்ற முறையில் முதலிடத்தில் இருந்து வருகிறது.

இந்த ரௌடி பேபி பாடல் இன்னும் ஒரு சில தினங்களில்20 கோடி பார்வையாளர்கள் என்ற உச்சத்தை தொடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

English Summary

ROWDY BABY SONG NEW RECORD


கருத்துக் கணிப்பு

உலக கோப்பைக்கான இந்திய கிரிக்கெட் அணி...கருத்துக் கணிப்பு

உலக கோப்பைக்கான இந்திய கிரிக்கெட் அணி...
Seithipunal