ரீ ரிலீஸ் ஆன கில்லி - கேக் வெட்டி கொண்டாடிய விஜய் ரசிகர்கள்.! - Seithipunal
Seithipunal


தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் நடிப்பில் கடந்த 2004 ஆம் ஆண்டு ஏப்ரல் 20 ஆம் தேதியன்று கில்லி திரைப்படம் வெளியானது. இந்தப்படம் விஜய் ரசிகர்கள் மற்றும் பொதுமக்களிடையே பெரும் வரவேற்பு பெற்றதுடன் வசூலிலும் மிகப்பெரிய சாதனையை படைத்தது.

இந்த நிலையில், இந்தது திரைப்படமானது இருபது ஆண்டுகளுக்கு பின் இதே தேதியில் இன்று மீண்டும் உலகம் முழுவதிலும் உள்ள திரையரங்குகளில் ரீ ரீலிஸ் செய்யப்பட்டுள்ளன. அதன் படி நாமக்கல் - சேலம் சாலையில் உள்ள கே.எஸ்.திரையரங்கில் கில்லி திரைப்படம் ரீ- ரீலிஸ் செய்யப்பட்டது.

அப்போது, தமிழக வெற்றிக் கழகத்தின் நாமக்கல் மேற்கு மாவட்டம் சார்பில் திரையரங்கு வளாகத்தில் கேக் வெட்டி கொண்டாடி மகிழ்ச்சியை பரிமாறிக்கொண்டனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

gilli kmovie re release celebration in namakkal


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->