சர்வதேச புவி நாள் இன்று : பூமியின் வளங்களை பாதுகாப்போம்.! - Seithipunal
Seithipunal


உலக புவி தினம் :

புவியின் சுற்றுச்சூழலின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி, புவி மாசடைவதை தடுக்கும் நோக்கத்தோடு அனைத்து நாடுகளிலும் இத்தினம் கடைபிடிக்கப்படுகிறது.

பூமிக்கு ஏற்பட்டுள்ள பிரச்சனையை உலக மக்கள் உணர வேண்டும் என கேலார்டு நெல்சன் என்கிற அமெரிக்கர் கருதினார். எனவே அவர் ஊர்வலம், பொதுக்கூட்டம், தர்ணா போன்றவற்றை மாணவர்களை கொண்டு நடத்தி வந்தார். 

1970ஆம் ஆண்டு ஏப்ரல் 22ஆம் தேதி புவியைப் பாதுகாக்க 2 கோடி பேர் கலந்துக்கொண்ட பேரணியை நடத்தினார். இதுவே, உலக புவி தினமாக மாறி கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

விளாதிமிர் லெனின் :

 'லெனின்" என்ற பெயரிலேயே உலகம் முழுவதும் நன்கு அறியப்பட்ட விளாதிமிர் லெனின் 1870ஆம் ஆண்டு ஏப்ரல் 22ஆம் தேதி ரஷ்யாவில் உள்ள சிம்பிர்ஸ்க் என்ற நகரில் பிறந்தார். இவருடைய இயற்பெயர் விளாதிமிர் இலீச் உல்யானவ்.

இவர் மக்களுக்காக, கொடுங்கோலாட்சி நடத்திக் கொண்டிருந்த ஜார் மன்னனுக்கு எதிராக போராடத் தீர்மானித்தார். மேலும் தொழிலாளர்களுக்காக தொழிலாளர் விடுதலை இயக்கம் என்பதை தொடங்கினார். 

1917ஆம் ஆண்டு மக்களால் புரட்சி நிகழ்த்தப்பட்டு ரஷ்யாவில் மன்னராட்சி முடிவுக்கு கொண்டுவரப்பட்டது.

ஒடுக்கப்பட்ட மக்களுக்காக தன் வாழ்க்கையை அர்ப்பணித்த லெனின் தனது 53ம் வயதில் (1924) மறைந்தார். இவருடைய உடல் பதப்படுத்தப்பட்ட நிலையில் ரஷ்யாவில் உள்ள செஞ்சதுக்கத்தில் பாதுகாக்கப்பட்டது. இவ்விடத்திற்கு லெனின் மாஸோலியம் என்று பெயர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

World Earth Day 2022


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->