நெஞ்சில் குத்திய வளர்த்த கெடா! துரோகத்துக்கான தண்டனை மரணம்! சோலி முடிந்தது ப்ரிகோஷின் கதை! - Seithipunal
Seithipunal


ரஷிய அதிபர் விளாதிமீர் புதினுக்கு எதிராக, வாக்னர் படைத் தலைவர் யெவ்கெனி ப்ரிகோஷின் ஆயுத போராட்டத்தில் ஈடுபட்டு இறந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

யெவ்கெனி ப்ரிகோஷின் என்பவர், சோவியத் யூனியனில் திருட்டு மற்றும் மோசடி வழக்கில் 9 ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்றவா். 

ரஷியாவின் தனியாா் துணை ராணுவப் படையான வாக்னா் குழுவிற்கு, சோவியத் யூனியன் சிதறிய பிறகு தலைவரானாா். ப்ரிகோஷினுக்கு ரஷிய அதிபா் புதினுடன் நீண்டகாலமாக உறவு கொண்டுள்ளது.

வாக்னா் குழு, உக்ரைன் போரில் ரஷிய ராணுவத்துடன் இணைந்து முக்கியப் பங்காற்றிய நிலையில், வாக்னா் குழுவுக்கு ரஷிய பாதுகாப்புத் துறை சாா்பில் போதிய வெடிபொருள்கள் வழங்கப்படாததை விமா்சித்த ப்ரிகோஷினுக்கும், புதின் அரசுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

இதனை அடுத்து, ரஷியாவை நோக்கி படையெடுத்த  ப்ரிகோஷின், ஆயுதக் கிளர்ச்சியில் ஈடுபட்டார்.

இதற்கிடையே, புதினுடன் ஏற்பட்ட பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்ட நிலையில், பெலாரஸில் ப்ரிகோஷின் ஆயுதக் கிளர்ச்சியை விட்டு விட்டு அரசியல் தஞ்சமடைவாா் என அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், செயிண்ட் பீட்டர்ஸ்பர்க் நகருக்கு நேற்றிரவு ரஷிய தலைநகர் மாஸ்கோவில் இருந்து சென்ற தனியார் விமானம் ஒன்று விபத்துக்குள்ளானது.

இதில் பயணித்த 10 பேரில் ப்ரிகோஷின் பெயரும் இடம்பெற்றிருக்கும் எனவும், விபத்தில் அனைவரும் இறந்துவிட்டதாகவும் ரஷிய விமானப் போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இருப்பினும், இதுவரை ப்ரிகோஷின் உடல் கண்டறியப்படவில்லை. ஆனால் சர்வதேச ஊடகங்கள், ப்ரிகோஷின் விமானத்தில் பயணம் செய்ததை உறுதி செய்துள்ளன.

செய்தியின் மறுபக்கம் : ப்ரிகோஷினை வளர்த்துவிட்டவரே அதிபர் புடின் தான். அமெரிக்காவிடம் பணம் வாங்கிக்கொண்டு அதிபர் புடினுக்கு எதிராகவே போர் தொடுத்ததால் (துரோகம் செய்ததால்) அவர் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது. 

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Wagner squadron leader dies


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->