விக்ரம் லேண்டரை கண்டுபிடித்த இளைஞருக்கு அடித்த அதிர்ஷ்டம்.! நேரில் சந்தித்த முதல்வர்.!  - Seithipunal
Seithipunal


நிலவில் கடந்த செப்டம்பர் மாதம் 7 ஆம் தேதி தரையிறங்க முயன்ற விக்ரம் லேண்டர் கட்டுப்பாட்டை இழந்து நிலவின் மேற்பரப்பில் விழுந்தது. இஸ்ரோ அதனைக் கண்டுபிடிக்க, தீவிர முயற்சி மேற்கொண்டது. ஆனால், எந்த முயற்சியும் கைகொடுக்கவில்லை. அதன் பின்னர், நாசா தங்களுடைய செயற்கைக்கோள் எடுத்த புகைப்படங்களை வெளியிட்டு வந்தது.

இந்நிலையில், மதுரையைச் சேர்ந்த சண்முக சுப்பிரமணியன் என்பவர் சென்னை தரமணியில் இருக்கும் லினக்ஸ் கணினி நிறுவனத்தில் இன்ஜினியராக பணிபுரிந்து வருகின்றார்.இவர் நாசா வெளியிட்ட அந்த புகைப்படங்களை ஆய்வு செய்து,  விக்ரம் லேண்டரின் உடைந்த பாகங்கள் கிடைத்து இருப்பதாக நாசாவிற்கு மின்னஞ்சல் அனுப்பி இருக்கின்றார். 

அதற்கு நாசா, அவருக்குப் பாராட்டு தெரிவித்து பதில் மின்னஞ்சல் அனுப்பியுள்ளது. விக்ரம் லேண்டரை கண்டுபிடித்ததற்காகச் சுப்பிரமணியனுக்குப் பல்வேறு தரப்பினரும் பாராட்டுகள் தெரிவித்து வருகின்றனர். இந்தநிலையில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று சென்னை பசுமை வழிச்சாலையில் இருக்கும் அவருடைய இல்லத்திற்கு சுப்ரமணியனை நேரில் அழைத்து மலர்க்கொத்து கொடுத்து வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்து இருக்கின்றார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

vikram lander discovered man meet with eps


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->