ஒவ்வொரு 11 நிமிடமும் ஒரு பெண் கொல்லப்படுகிறார் - ஐநா பொதுச்செயலாளர் - Seithipunal
Seithipunal


ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 25ஆம் தேதி "பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்புக்கான சர்வதேச தினம்"அனுசரிக்கப்படுகிறது. இத்தினத்தை முன்னிட்டு ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் தெரிவித்ததாவது, 

ஒவ்வொரு 11 நிமிடங்களுக்கும் ஒரு பெண் அல்லது சிறுமி நெருங்கிய துணை அல்லது குடும்ப உறுப்பினரால் கொல்லப்படுகிறார். இது பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான வன்முறை உலகில் மிகவும் பரவலான மனித உரிமை மீறல் என்றார்.

2026ஆம் ஆண்டிற்குள் பெண்கள் உரிமை அமைப்புகள் மற்றும் இயக்கங்களுக்கு நிதியுதவியை 50% அதிகரிக்குமாறு அரசாங்கங்களை கேட்டுக் கொண்டார்.

மேலும் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான வன்முறைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் உருமாறும் நடவடிக்கைக்கான நேரம் இது என்றும், இந்த சம்பவங்களைச் சமாளிக்க தேசிய செயல் திட்டங்களை வடிவமைத்து, நிதியளித்து செயல்படுத்துமாறு அரசாங்கங்களை வலியுறுத்தினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

UN Central secratary says Every 11 minutes a woman is killed by an intimate partner or family member


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->