உக்ரைனில் மிகப்பெரிய மனித உரிமை மீறல் - ஐநா குற்றச்சாட்டு - Seithipunal
Seithipunal


உக்ரைனுக்கும், ரஷ்யாவுக்கும் இடையேயான போர் கடந்த வருடம் பிப்ரவரி மாதம் 24ஆம் தேதி முதல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஐநா சபையின் 52வது மனித உரிமைகள் ஆணையக் கூட்டம் நேற்று சுவிட்சர்லாந்தில் நடைபெற்றது. அப்பொழுது கூட்டத்தில் உரையாற்றிய ஐ.நா. பொதுச் செயலா் அன்டோனியோ குட்டெரெஸ், போரில் உக்ரைனில் மிகப்பெரிய அளவில் மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக ரஷ்யாவை குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும் உக்ரைன் மீதான தாக்குதலின் பொழுது பொதுமக்கள் குடியிருப்பின் மீதும், கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள் என அனைத்து உக்ரைன் கட்டமைப்புகளின் மீது ரஷ்ய படைகள் தாக்குதல் நடத்தியுள்ளதாகவும், சிறுமிகள், பெண்கள் ஆகியோரை வரம்பு மீறி பாலியல் ரீதியில் துன்புறுத்தியதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் போரினிடையே பெரும்பாலான குழந்தைகள் நாடு கடத்தப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பாக விசாரணை நடத்த ஐநா சார்பில் பல்வேறு நாடுகளுக்கு அழைப்பு விடுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

UN accuses Ukraine of massive human rights abuses


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->