பீரங்கிகளை வழங்கும்படி நட்பு நாடுகளுக்கு உக்ரைன் கோரிக்கை.! - Seithipunal
Seithipunal


1949-ம் ஆண்டு அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ் உள்ளிட்ட 12 நாடுகள் இணைந்து நேட்டோ என்ற ராணுவ கூட்டமைப்பை உருவாக்கியது. தற்போது நேட்டோவில் 30 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன.

இந்நிலையில் ராணுவ கூட்டமைப்பான நேட்டோவில் இணைய உக்ரைன் விரும்பியதற்கு எதிர்ப்பு தெரிவித்த ரஷ்யா, கடந்த வருடம் பிப்ரவரி மாதம் 24ஆம் தேதி உக்ரைன் மீது போரை தொடங்கியது. தற்பொழுது போர் 10 மாதங்களுக்கு மேலாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இப்போரில் உக்ரைனுக்கு ஆதரவாக மேற்கத்திய நாடுகள் பொருளாதார ரீதியாகவும், ஆயுதங்களை வழங்கியும் உதவி வருகின்றது. இந்நிலையில் தீவிரத் தாக்குதலை தொடங்கிய ரஷ்ய படைகள் டினிப்ரோ நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடத்தைக் குறிவைத்து நேற்று முந்தினம் ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இந்த ஏவுகணை தாக்குதலில் 35 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 85 பேர் காயமடைந்துள்ளனர்.

இந்நிலையில் ரஷ்யாவின் ஏவுகணை தாக்குதல்களை சமாளிக்க பீரங்கிகளை வழங்கும்படி நட்பு நாடுகளுக்கு உக்கரையின் அரசு கோரிக்கை விடுத்துள்ளது. மேலும் பீரங்கிகள் கிடைத்தால் போரின் போக்கை மாற்றி அமைக்கக்கூடும் என்று உக்ரையின் தெரிவித்துள்ளது. இதைத்தொடர்ந்து உக்ரைனின் கோரிக்கையை பரிசீலிப்பதாக ஜெர்மனி அரசு தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Ukraine requests allies to provide artillery


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->