உக்ரைன் அணை உடைப்பு... மிக கொடூரமானது - ஐ.நா. பொதுச்செயலாளர் - Seithipunal
Seithipunal


கடந்த 2022ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்தது. தற்பொழுது ஓராண்டுக்கு மேலாக நடைபெற்று வரும் இப்போரில் உக்ரைன் கிழக்கு மற்றும் தெற்கு நகரங்களை கைப்பற்றி ரஷ்யா தொடர்ந்து முன்னேறி வருகிறது. இருப்பினும், உக்ரைன் மேற்கத்திய நாடுகள் மற்றும் ஐரோப்பிய நாடுகளின் ஆயுத பலத்துடன் ரஷ்யாவை எதிர்த்து தொடர்ந்து போராடி வருகிறது.

இந்நிலையில் தெற்கு உக்ரைன் நகரமான ரஷ்யா கட்டுப்பாட்டில் உள்ள நோவா ககோவ்கா பகுதியிலுள்ள ககோவ்ஸ்கா அணையில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் டினிப்ரோ ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு கார்சன் நகரின் பல்வேறு பகுதிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.மேலும் அணை உடைப்பால் 80 நகரங்கள் மற்றும் கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கக்கூடும் என்று உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார். 

இதைத்தொடர்ந்து, அணையை தகர்த்தது ரஷ்யா மற்றும் உக்ரைன் என இரு நாடுகளும் மாறி மாறி ஒருவரை ஒருவர் குற்றஞ்சாட்டி வருகின்றனர். இந்நிலையில் அணை உடைக்கப்பட்ட சம்பவம் குறித்து ஐ.நா பொது செயலாளர் அண்டோனியோ குட்ரெஸ், இந்த தாக்குதல் மக்கள் மீதான போருக்கு கொடுக்கும் விலைக்கு ஓர் உதாரணம். இது உக்ரைன் மீது ரஷியா நடத்திய மிக பயங்கரமான தாக்குதல் ஆகும்.

கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக பாதிக்கப்படுவோரின் அவலக்குரல் கேட்டுக் கொண்டே இருக்கிறது. இது நிறுத்தப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளார். மேலும் குடிநீர், நீர் சுத்திகரிப்பு உபகரணங்கள் மற்றும் இதர உதவிகள் வழங்குவது தொடர்பாக ஐ.நா சபை மற்றும் மனிதநேய தொண்டு அமைப்புகள் உக்ரைனிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Ukraine dam breach worst UN General Secretary


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->