சீனா : நிலக்கரி சுரங்கம் இடிந்து விழுந்ததில் 2 பேர் பலி.! 53 பேர் இடிபாடுகளில் சிக்கித் தவிப்பு.! - Seithipunal
Seithipunal


சீனாவில் நிலக்கரிச் சுரங்கம் இடிந்து விழுந்ததில் இருவர் உயிரிழந்துள்ளனர். மேலும் 50க்கும் மேற்பட்டோர் இடிபாடுகளில் சிக்கிக்கொண்டனர்.

சீனாவின் உள் மங்கோலியாவின் தன்னாட்சி பிராந்தியத்தின் அல்ஷா லெப்ட் பகுதியில் உள்ள நிலக்கரி சுரங்கத்தில் நேற்று மதியம் வழக்கம் போல் தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்பொழுது திடீரென சுரங்கத்தின் மேற்பகுதி இடிந்து விழுந்து உள்ளது. இதில் 50க்கும் மேற்பட்டோர் சுரங்கத்தின் இடிபாடுகளில் சிக்கிக்கொண்டனர். 

இதையடுத்து இந்த விபத்து குறித்த தகவல் அறிந்து வந்த மீட்பு குழுவினர், தொடர்ந்து இடிபாடுகளில் சிக்கி உள்ளவர்களை மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்த விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் ஆறு பேர் காயங்களுடன் மீட்கப்பட்டதாகவும், இன்னும் 53 பேர் இடுபாடுகளில் சிக்கி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து, தேசிய சுகாதார ஆணையம் 15 ஆம்புலன்ஸ்கள் மற்றும் 45 மருத்துவ ஊழியர்களை சம்பவ இடத்திற்கு அனுப்பியதாக தெரிவித்துள்ளது. இந்நிலையில் இந்த விபத்து குறித்து அறிந்த சீன அதிபர் ஜி ஜின்பிங், காணாமல் போனவர்களை மீட்பதற்கும், காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கும் எல்லா முயற்சிகளையும் எடுக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Two killed 53 trapped after coal mine collapse in china


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->