தமிழக அரசு அனுப்பிய அரிசி மூட்டைகள் - இலங்கை லவுனியா பகுதியில் பதுக்கி வைப்பு.! - Seithipunal
Seithipunal


இலங்கை சீனாவிடம் வாங்கிய கடனுக்கு வட்டி செலுத்துவதால் பெரும் பொருளாதார நெருக்கடிக்கு ஆளாகி உள்ளது. இந்த பொருளாதார நெருக்கடியை சரி செய்வதற்கு அனைத்து நாடுகளும் உதவி செய்து வருகின்றன. 

இந்த நாடுகளை விட இந்திய இலங்கைக்கு பல உதவிகளை செய்து வருகிறது. அந்தவகையில், தமிழக அரசு சார்பில் அரிசி உள்ளிட்ட பல உணவுப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டன. இந்த உதவிப்பொருட்கள் அங்குள்ள இலங்கைத் தமிழர்கள் பயன்பெறும் வகையில் அனுப்பி வைக்கப்பட்டிருந்தன. 

இந்நிலையில் இலங்கை வவுனியா பகுதியில் உள்ள மதுராநகர் கிராமத்தின் கிராம அபிவிருத்தி சங்க கட்டிடத்தில் தமிழக அரசு சார்பில் அனுப்பி வைக்கப்பட்டுள்ள அரிசி மூட்டைகள் அனைத்தும் பதுக்கி வைக்கப்பட்டிருந்ததை, கிராம மக்கள் கண்டுபிடித்துள்ளனர். 

அந்த அரிசி மூட்டைகள் அனைத்தும் வண்டுகள் நிறைந்து எதற்கும் உதவாத வகையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து, விசாரணை மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

tn govt rice send to in srilanga lavuniya hoarded


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->