ஜப்பானில் அதிர்ச்சி சம்பவம்.! ஒரே இடத்தில் ஒன்று கூடிய ஆயிரக்கணக்கான காகம்.! - Seithipunal
Seithipunal


ஜப்பான் நாட்டில் உள்ள கிழக்கு பகுதியில் ஹோன்சு தீவில் கட்டிடங்கள், சாலைகள் மற்றும் வாகனங்கள் என்று ஒரே சமயத்தில் ஆயிரக்கணக்கான காகங்கள் கூட்டம் கூட்டமாக அமர்த்துள்ளன.

அதுமட்டுமல்லாமல், வானத்திலும் காகங்கள் கூட்டம் கூட்டமாக பறந்தன. இந்த விசித்திர சம்பவத்தை பார்த்து பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். இந்த நிலையில் ஹோன்சு தீவு முழுவதும் காகங்கள் சூழ்ந்திருக்கும் வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வைரலாகி வருகின்றன.

இந்த நிகழ்வின் பின்னணியில் உள்ள காரணம் என்ன என்பது குறித்து தெளிவாக தெரியவில்லை. இதைத் தொடர்ந்து, இந்த சம்பவம் தொடர்பாக நிபுணர்கள் தெரிவித்துள்ளதாவது, "இந்த நிகழ்வு நிலநடுக்கம் போன்ற இயற்கை பேரழிவுகளை சுட்டிக்காட்டுகிறது" என்றுத் தெரிவித்துள்ளனர். 

இதேபோல், சமீபத்தில் துருக்கியில் நிலநடுக்கம் ஏற்படுவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு பறவைகள் ஒலி எழுப்பியபடி கூட்டம் கூட்டமாக வானத்தில் பறந்து சென்ற வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது என்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

thousand of crows flock of streets in hansu island jappan


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->