இலங்கையில் மனித உரிமை மீறலுக்கு எதிரான தீர்மானம் ஐ.நா.வில் நிறைவேற்றம்.! - Seithipunal
Seithipunal


அந்நிய செலாவணி பற்றாக்குறை, அரசியல் குழப்பம் மற்றும் பணவீக்கத்தால் கடும் பொருளாதார நெருக்கடியை இலங்கை சந்தித்து வருகிறது. 

இந்நிலையில் முன்னாள் அதிபர்கள் பதவி விலகிய நிலையில் ரணில் விக்ரமசிங்கே இலங்கை அதிபராக பதவியேற்றார். இருப்பினும் அத்தியாவசிய பொருட்கள் விலை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே இருப்பதால் நாடு முழுவதும் அரசுக்கு எதிராக போராட்டங்கள் அதிகரிக்க வருகின்றன. இதில் போராட்டக்காரர்கள் மீது ராணுவமும், போலீசாரும் தாக்குதல் நடத்தும் நிகழ்வுகளும் நடந்து வருகின்றன. 

இதை கண்டிக்கும் விதமாக மனித உரிமை மீறல்களுக்கு எதிரான தீர்மானத்தை ஜெனிவாவில் உள்ள ஐநா மனித உரிமை கவுன்சிலில் இங்கிலாந்து, அமெரிக்கா, ஜெர்மனி, கனடா உள்ளிட்ட நாடுகள் கொண்டு வந்துள்ளன.

இந்த தீர்மானத்தில், இலங்கையில் மனித உரிமை மீறல்களுக்கு எதிரான ஆதாரங்களை திரட்டவும், ஆய்வு செய்யவும், மனித உரிமை அமைப்புகளுக்கு அதிகாரம் வழங்க வேண்டும்.

மேலும் எதிர்கால மனித உரிமை மீறல்களுக்கு தடுப்பதற்கு வியூகத்தை வகுக்க வேண்டும் என்றும், இலங்கையில் நல்லிணக்கத்தை ஊக்குவிக்கவும், குற்றம் செய்தவர்களை பொறுப்பேற்க செய்ய வேண்டும் என்று தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

The resolution against the violation of human rights passed in UN


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->