மாலியில் பயங்கரவாதிகள் தாக்குதல் - 14 ராணுவ வீரர்கள் பலி - Seithipunal
Seithipunal


மேற்கு ஆப்பிரிக்க நாடான மாலியில், கடந்த 2012 ஆம் ஆண்டிலிருந்தே அல்-கொய்தா மற்றும் ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதிகள் வடக்கு மற்றும் மத்திய பகுதிகளில் தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றன. இதனால் பயங்கரவாதிகளுக்கும் ராணுவத்திற்கும் அவ்வப்போது மோதல் ஏற்பட்டு வருகின்றன.

இந்நிலையில் ராணுவ பயிற்சிக்காக இரண்டு வெவ்வேறு இடங்களில் முகாமிட்டிருந்த ராணுவ வீரர்கள் மீது பயங்கரவாதிகள் வெடிகுண்டுகள் வீசி தாக்குதலில் ஈடுபட்டனர்.

இதில் மத்திய மாலியில் உள்ள கௌமாரா மற்றும் மசினா நகரங்களுக்கு இடையே, தியா மற்றும் டியாஃபராபே கிராமங்களுக்கு இடையே பல மேம்படுத்தப்பட்ட வெடிபொருட்கள் வெடித்ததாக, ராணுவத்தின் மக்கள் தொடர்பு இயக்குநர் கர்னல் சோலிமேன் டெம்பேலே தெரிவித்தார்.

இதையடுத்து ராணுவ வீரர்களும் பதிலடி தாக்குதலில் ஈடுபட்டனர். இரண்டு வெவ்வேறு இடங்களில் நடைபெற்ற தாக்குதலில் 14 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். 30-க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதுவரை இது தாக்குதலுக்கு எந்த வித பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Terrorist attack in Mali kills 14 soldiers


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->