போப் பிரான்சிஸ்க்கு அறுவை சிகிச்சை நிறைவு.. ஒரு வாரத்திற்கு அனைத்து சந்திப்புகளும் ரத்து.! - Seithipunal
Seithipunal


கத்தோலிக்க திருச்சபையின் தலைவரான போப் பிரான்சிஸ் (வயது 86). இவர் குடல் அறுவை சிகிச்சைக்காக நேற்று முன்தினம் வாடிகன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இதுகுறித்து வாடிகன் தேவாலயத்தின் சார்பில் வெளியிட்டுள்ளப்பட்டுள்ள செய்தி குறிப்பில் கடந்த சில நாட்களாக போப் பிரான்சிஸ் ஹெர்னியா பாதிப்பால் அவதிப்பட்டு வந்ததாக தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து மருத்துவர்கள் தீவிர பரிசோதனை மற்றும் ஆலோசனைகளுக்கு பிறகு அறுவை சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்பட்டது. இந்த நிலையில் ரோமில் உள்ள மருத்துவமனையில் போப் பிரான்சிஸ் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அறுவை சிகிச்சை முடிந்த பிறகு நீண்ட நாட்களுக்கு அவர் மருத்துவமனையில் ஓய்வெடுப்பார் எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் இன்று போப் ஆண்டவருக்கு 3 மணி நேரம் நடைபெற்ற அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிவடைந்துள்ளது. இதனையடுத்து வரும் 18ம் தேதி வரை அவரது அனைத்து சந்திப்புகளும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக வாடிகன் தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Surgery successful bop Francis


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->