பொருளாதார நெருக்கடி: ராணுவ வீரர்களின் எண்ணிக்கையை குறைக்க இலங்கை முடிவு.! - Seithipunal
Seithipunal


அந்நிய செலாவணி பற்றாக்குறை, அரசியல் குழப்பம் மற்றும் பணவீக்கத்தால் கடும் பொருளாதார நெருக்கடியை இலங்கை சந்தித்து வருகிறது. இதனால் அத்தியாவசிய உணவுப் பொருட்கள், எரிபொருள், உரங்கள் மற்றும் மருந்துகள் ஆகியவற்றின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.

இந்நிலையில் பொருளாதாரத்தை மேம்படுத்தவும், செலவை குறைக்கவும் பல்வேறு சீர்திருத்தங்களை இலங்கை அரசு செய்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக ராணுவ வீரர்களை மூன்றில் ஒரு பகுதியாக குறைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக பாதுகாப்பு துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக வெளியிட்ட அறிக்கையில், தற்போதுள்ள 2,00,783ஆக இருக்கும் ராணுவ வீரர்களின் எண்ணிக்கையை அடுத்த ஆண்டு 1,35000 ஆகவும், 2030ஆம் ஆண்டுக்குள் 1,00000 வீரர்களாகவும் குறைக்கப்படும் என்று  தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ராணுவ வீரர்களின் எண்ணிக்கையை குறைத்து நவீன தொழில்நுட்பம் மற்றும் திட்டங்கள் மூலம் இராணுவத்தை வலிமையாக மாற்ற முடிவு செய்திருப்பதாக பாதுகாப்பு துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Sri Lanka decided to reduce the number of soldiers due to economic crisis


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->