எதிர்க்கட்சித் தலைவர் கழுத்தில் கத்திக்குத்து.!! செய்தியாளர்கள் சந்திப்பின்போது பரபரப்பு.!! - Seithipunal
Seithipunal


தென்கொரியா எதிர்க்கட்சித் தலைவர் லீ ஜே மியுங் பூசான் நகரில் நடத்திய செய்தியாளர்கள் சந்திப்பின் போது கக்தியால் குத்தப்பட்டார். அவர் புதிய விமானநிலையத்தை பார்வையிட்ட பின் செய்தியார்களுடன் பேசிய படி தனது காரை நோக்கி நடந்து செல்லும் போது முன்னாள் சென்ற நபர் லீ மீது பாய்ந்து அவரின் கழுத்தில் கத்தியால் குத்தினார். இந்தத் தாகுதலால் நிலைகுலைந்து கீழே விழும் லீக்கு அருகில் இருந்த ஒருவர் தனது கைக்குட்டையால் அவரின் கழுத்தைக் அழுத்திப் பிடிப்பது உள்ளிட்ட காட்சிகள் உள்ளூர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது.

படுகாயமடைந்த லீ உடனடியாக ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். கத்திக்குத்து காயத்தால் லீக்கு ரத்தப்போக்கு இருந்த போதிலும் அவர் நினைவிழக்கவில்லை. உடனடியாக அவர் பூசன் தேசிய பல்கலைக்கழக மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். இது எதிர்க்கட்சித் தலைவர் லீக்கு எதிரான தீவிரவாத தாக்குதல். ஜனநாயகத்துக்கு அச்சுறுத்தலான செயல்கள் ஒரு போதும் ஏற்றுக்கொள்ள முடியாது. லீயின் நிலைமை குறித்த முழுமையான மருத்துவ அறிக்கைக்காக காத்திருக்கிறோம்.

 இந்த தாக்குதல் குறித்து முழுமையான விசாரணை மேற்கொள்ள வேண்டும்” லீயின் ஜனநாயகக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் குவான் சில் சியுங் தெரிவித்துள்ளார். லீயின் கழுத்தில் ஒரு சென்டிமீட்டர் அளவுக்கு காயம் ஏற்பட்டுள்ளது எனவும்,  ரத்தப்போக்கு குறைவாகவே உள்ளது எனவும், அவர் சுயநினைவில் இருக்கிறார் எனதும், பூசான் நகர போலீஸார் தெரிவித்துள்ளனர். எதிர்க்கட்சி தலைவர் லீயை தாக்கியவரை போலீஸார் கைது செய்துள்ளதாக அந்நாட்டு செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

south korea Opposition leader Lee Jae myung stabbed in the neck


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->